சூரரைப்போற்று அற்புதமான படைப்பு… ஆஹா ஓஹோ என பாராட்டிய சமந்தா !
சென்னை : சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்த ஒருத்தர் விடாமல் அனைவரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர் அதில் பல சினிமா பிரபலங்களும் உள்ளனர்.
சூர்யாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் பிரபலங்களும் பலர் படத்தை பாராட்டியுள்ள நிலையில் இப்பொழுது நடிகை சமந்தாவும் படத்தைப் பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என புகழ்ந்து உள்ளார்.

சூரரைப்போற்று
நடிகர் சூர்யா மற்றும் சுதா கொங்கரா முதல் முறையாக இணைந்த சூரரைப் போற்று திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நிலையில் ரசிகர்களும் இதை மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்து உள்ளனர்.

பொம்மி கதாபாத்திரம்
ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் சூரரைப்போற்று வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல் சூர்யாவின் நடிப்பு தொடர்ந்து பாராட்டுக்களைப் பெற்று வரும் நிலையில் அதில் அபர்ணா பாலமுரளியின் சுந்தரி என்கிற பொம்மி கதாபாத்திரமும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பாராட்டி பதிவு
இவ்வாறு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்த சூரரைப்போற்று மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழி பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்று வந்த நிலையில் இப்பொழுது பிரபல நடிகை சமந்தாவும் சூரரைப்போற்று படத்தைப் பாராட்டி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அற்புத படைப்பு
கணவர் நாக சைதன்யாவுடன் மாலத்தீவில் ஹாலிடேவை என்ஜாய் செய்து கொண்டிருந்த நடிகை சமந்தா ஓரிரு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் திரும்பிய நிலையில் சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தைப் பார்த்து ஆடிப்போன சமந்தா உடனடியாக சமூக வலைதளங்களில் சூரரைப்போற்று திரைப்படத்தை பற்றி ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே சூரரைப்போற்று மிகச்சிறந்த படம் எனவும் இது ஒரு அற்புத படைப்பு எனவும் பாராட்டியதோடு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மனதார பாராட்டிய சமந்தாவுக்கு அபர்ணா பாலமுரளி நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











