Samantha - விஜய் தேவரகொண்டாவுடன் துருக்கி சென்ற சமந்தா - எமோஷனல் பதிவு

சென்னை: Samantha (சமந்தா) விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா துருக்கி சென்றிருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் எமோஷனலான கேப்ஷனுடன் பகிர்ந்திருக்கிறார்.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைத்னயாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக அவர்களது திருமணம் கோவாவில் நடந்தது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

 Samantha Put emotional post at her instagram

சமந்தா கிராஃப்: திருமண வாழ்க்கை முடிந்துவிட்டதால் அது கொடுக்கும் மன அழுத்தம் காரணமாக இனி சமந்தாவால் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாது என பலரும் ஆரூடம் கூறினர். ஆனால் அவர்களது ஆரூடத்தை அடித்து நொறுக்கும்படி சமந்தா கோலிவுட், ஹாலிவுட் என றெக்கை கட்டி பறந்தார். நடிப்பு மட்டுமின்றி புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமாவுக்கு நடனமும் ஆடினார். இதனால் அவரது கரியர் கிராஃப் உச்சம் சென்றது.

மையோசிடிஸ் நோய்: இப்படி அவரது கரியரின் கிராஃப் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த சூழலில் அவருக்கு மையோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோய் வந்தது. இதுகுறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரசிகர்கள் அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். தன்னம்பிக்கை இழக்காத சமந்தா தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு தற்போது அந்த நோயிலிருந்து மீண்டிருக்கிறார்.

 Samantha Put emotional post at her instagram

நடிப்பில் கவனம்: மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்டிருக்கும் சமந்தா மீண்டும் படங்களில் நடித்துவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த சாகுந்தலம் படம் அண்மையில் ரிலீஸாகி படுதோல்வியை சந்தித்தது. பத்து கோடி ரூபாய்கூட அந்தப் படம் வசூல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக சமந்தாவின் கரியரில் சாகுந்தலம் பெரும் தோல்வி படமாக சேர்ந்திருக்கிறது.

குஷி: அதே சமயம் கேன்ஸ் திரைப்பட விழாவில் அப்படத்துக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இருப்பினும் வசூல் ரீதியாக அடி வாங்கியதால் ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் அவர். அதேபோல் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்திருக்கும் குஷி படம் விரைவில் வெளியாகிறது. மேலும் அந்தப் படத்தின் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 Samantha Put emotional post at her instagram

துருக்கியில் சமந்தா: இந்நிலையில் குஷி படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் துருக்கிக்கு சென்றிருக்கின்றனர். அங்கு ஒரு ரெஸ்டாரண்ட்டில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும், "நல்லது கெட்டது, ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்வி என அனைத்தையும் இந்த வருடத்தில் பார்த்துவிட்டேன். ஆனால் வெகு சிலர்தான் உண்மையான நண்பர்களாக உடன் நிற்கிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

சிட்டாடல்: இதற்கிடையே ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதன் இந்திய வெர்ஷனில் ப்ரியங்கா சோப்ரா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதனை ராஜ்& டிகே இயக்குகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X