சமந்தா, ரகுல், காஜல் அகர்வால்.. ஈஷா யோகா மைய மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

சென்னை: கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அருகே அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் கோலாகலமாக நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகை சமந்தா, ரகுல் ப்ரீத் சிங் தனது தோழிகளுடன் ஈஷா யோகா மையத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார்.

மகாசிவராத்திரி திருவிழா

மகாசிவராத்திரி திருவிழா

நாடு முழுவதும் நேற்று மகாசிவராத்திரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சிவபெருமானை வழிபடும் மக்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவராத்திரியை கொண்டாடினர். கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஆண்டு தோறும் கோலாகலமாக மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்றும் மகாசிவராத்திரி விழா களைகட்டியது.

சங்கீத கச்சேரி

சங்கீத கச்சேரி

இரவு முழுவதும் பக்தர்களை உறங்காமல் கண் விழித்து வைத்திருக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சங்கீத கச்சேரி உள்ளிட்டவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. நாட்டுப்புற பாடகர் அந்தோனி தாசன், டோலிவுட் பின்னணி பாடகி மங்களி, பின்னணி பாடகர் பார்த்தீவ் கோஹில், ராஜஸ்தானிய நாட்டுப்புற பாடகர் குட்லே கான் உள்ளிட்ட பலர் இசை கச்சேரி நடத்தினர்.

சமந்தாவும் ரகுல் ப்ரீத் சிங்கும்

சமந்தாவும் ரகுல் ப்ரீத் சிங்கும்

ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் தமன்னா, காஜல் அகர்வால், கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழாவில் நடிகை சமந்தா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நண்பர்களுடன் கலந்து கொண்டு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.

Recommended Video

நிறைய தமிழ் பட வாய்ப்பை எதிர் பார்க்கிறேன் | ACTRESS ZOYA HUSSAIN CHAT | KAADAN | FILMIBEAT TAMIL
கணவருடன் காஜல்

கணவருடன் காஜல்

மேலும், நடிகை காஜல் தனது கணவர் கெளதம் கிட்சிலுவுடன் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், பல பிரபலங்களும் இந்த மகாசிவராத்திரி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X