ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை... அக்கா- தங்கை ஆகும் சமந்தா, ரஷ்மிகா மந்தனா!
சென்னை: ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் நடிகை சமந்தாவும் ராஷ்மிகா மந்தனாவும் அக்கா தங்கையாக நடிக்க உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது.
Recommended Video
சினிமா தயாரிப்பாளர்கள், முடிவடைந்த படங்களை ஓடிடி-யில் வெளியிட்டு வருகின்றனர்.

கொரோனா சிகிச்சை
கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை, 21 லட்சத்து 53 ஆயிரத்து 10 ஆக அதிகரித்து இருக்கிறது. தற்போது நாட்டில் 6 லட்சத்து 28 ஆயிரத்து 747 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 43 ஆயிரத்து 379 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நடிகர், நடிகைகள்
கடந்த 5 மாதமாக படப்பிடிப்பு இல்லாததால், நடிகர், நடிகைகள் வீட்டில் இருக்கின்றனர். அவர்கள் சினிமா பார்ப்பது, சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுவது என்று இருந்து வருகின்றனர். இதற்கிடையிலும் சில நடிகைகள் கதை கேட்பதில் பிசியாக இருந்து வருகின்றனர். அதில் நடிகை சமந்தாவும் ஒருவர். அவர் லாக்டவுன் முடிந்ததும் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகை சமந்தா
இதில் நயன்தாராவுடன் இணைந்து அவர் நடிக்க இருக்கிறார். அடுத்து அஸ்வின் சரவணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே பிரபல தெலுங்கு இயக்குனர் ஒருவர் சொன்ன கதையை கேட்டுள்ள சமந்தா, அதில் நடிக்கவும் சம்மதித்துள்ளார். அது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. சமந்தா நடிப்பதற்கு அதிக ஸ்கோப் உள்ள கதை என்று கூறப்படுகிறது.

ராஷ்மிகா மந்தனா
இதில் சமந்தாவுடன் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிக்க இருக்கிறார். இவர் தெலுங்கு சினிமாவில் தற்போதைய டாப் ஹீரோயினாக இருக்கிறார். அவரை லக்கி ஹீரோயின் என்று கூறி வருகின்றனர். தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற படத்தில் அறிமுகமான அவர், டியர் காம்ரேட், மகேஷ்பாபுவுடன் சரிலேரு நீக்கெவரு, நிதினுடன் பீஷ்மா படங்களில் நடித்தார். இப்போது அல்லு அர்ஜூன் ஜோடியாக, புஷ்பா படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதிகாரபூர்வ அறிவிப்பு
இதற்கிடையே சமந்தாவே, நடிப்பில் மிரட்டுவார். அவருடன் ராஷ்மிகா மந்தனாவும் சேர்ந்தால் கேட்கவே வேண்டாம் என்கிறார்கள் ரசிகர்கள். இருவரும் சிறப்பான நடிகைகள் என்பதால், ரசிகர்கள் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர். படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











