காத்துவாக்குல ரெண்டு காதல் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய CSK வீரர்கள்.. சமந்தாவின் ரியாக்ஷனை பாருங்க!

சென்னை: வேட்டி சட்டையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்றுள்ள Two Two Two பாடலுக்கு நடனமாடிய வீடியோவை ஷேர் செய்து நடிகை சமந்தா போட்டிருக்கும் கமெண்ட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைத்து பாடிய Two Two Two பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பல பிரபலங்களும் அந்த பாடலுக்கு நடனமாடி ரீல் போட்டுள்ளனர்.

சமந்தா நடிப்பில்

சமந்தா நடிப்பில்

விவாகரத்துக்கு பிறகு நடிகை சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா மாமா பாடல் மட்டுமே வெளியாகி ஹிட் அடித்த நிலையில், அவர் நடிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்துள்ள இந்த படம் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி உள்ளது.

ஒரு கோடி வியூஸ்

ஒரு கோடி வியூஸ்

சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் பட டிரைலரில் சமந்தா மற்றும் நயன்தாரா இருவரில் ஒருவர் விஜய்சேதுபதியை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கின்றனர். ஆனால், இருவரையுமே திருமணம் செய்து கொள்ள விஜய்சேதுபதி நினைப்பதால் வரும் விளைவு தான் திரைக்கதை என்பது டிரைலரிலேயே தெளிவாக புரிகிறது. வெளியான ஒரே நாளில் ஒரு கோடி வியூஸை இந்த டிரைலர் அள்ளி டிரெண்டாகி வருகிறது.

சிஎஸ்கே வீரர்கள் டான்ஸ்

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நடத்திய பிரைவேட் பார்ட்டியில் தோனி, பிராவோ, ஜடேஜா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என அனைவரும் வேட்டி சட்டையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் Two Two Two பாடலுக்கு நடனமாடும் வீடியோவை ஷேர் செய்துள்ளனர். அந்த வீடியோவை பார்த்த நடிகை சமந்தா அதற்கு போட்டிருக்கும் கமெண்ட் தான் தற்போது டிரெண்டாகி வருகிறது.

சமந்தா ரியாக்‌ஷன்

சமந்தா ரியாக்‌ஷன்

'தி பெஸ்ட்' என நடிகை சமந்தா அந்த பாடல் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். காத்துவாக்குல ரெண்டு காதல் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அந்த படத்தின் பாடலுக்கு நடனமாடி இருப்பது படக்குழுவுக்கு ஃப்ரீ புரமோஷனாக மாறி உள்ளது.

Recommended Video

Ram Gopal Varma Exclusive | மக்களுக்கு Controversy தான் புடிச்சிருக்கு | Filmibeat Tamil
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் தோனி நடித்திருந்தார். இந்நிலையில், விக்னேஷ் சிவன் படத்தின் பாடலுக்கு அவரும் அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும் நடனாமாடிய வீடியோ அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X