ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு..? ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க?

By

Recommended Video

Popular actress exit from cinema soon | Kolywood Actress

சென்னை: ஒரு படம் பிளாப் ஆனதால், நடிகை சமந்தாவை நீக்கிவிட்டு வேறு ஹீரோயினை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் சென்டிமென்ட்களுக்கு பஞ்சம் கிடையாது. அது, இந்த ட்விட்டர் காலத்திலும் தொடர்வதுதான் காமெடியாக இருக்கிறது.

தமிழில், பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி தங்கமகன், தெறி, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உட்பட பல்வேறு படங்களில் நடித்தவர் சமந்தா.

தெலுங்கு, தமிழில்

தெலுங்கு, தமிழில்

தெலுங்கிலும் நடித்துவந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் விழந்தார். பிறகு இரு வீட்டு சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா தெலுங்கு, தமிழில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஷர்வானந்த்

ஷர்வானந்த்

இந்நிலையில் தமிழில் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் நடித்திருந்தார் சமந்தா. விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் ஷர்வானந்தும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடித்திருந்தனர். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்கினார். படத்துக்கு ஜானு என்று டைட்டில் வைத்திருந்தனர்.

வெற்றி பெறவில்லை

வெற்றி பெறவில்லை

இந்தப் படம் கடந்த 7 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. 'என் மனதுக்கு நெருக்கமான படம் இது. இதன் ரீமேக்கில் நடிக்கவில்லை என்றால் வருத்தப் பட்டிருப்பேன்' என்று கூறியிருந்தார் நடிகை சமந்தா. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அவர் அப்செட் ஆனார். இந்நிலையில் ஷர்வானந்துடன் மகா சமுத்திரம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் சமந்தா.

அதிதி ராவ்

அதிதி ராவ்

'ஜானு' தோல்வி அடைந்ததால், அந்த ஜோடி வேண்டாம் என்று தயாரிப்பு முடிவு செய்தது. இதனால், சமந்தாவை நீக்கிவிட்டு அதிதி ராவ் ஹைதாரியை ஒப்பந்தம் செய்துள்ளனர். சமந்தா தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், அதிதி நடித்து தெலுங்கில் ஒரு படமும் ஓடவில்லையாம். 'போங்கய்யா, நீங்களும் உங்க சென்டிமென்ட்டும் என்கிறார்கள் டோலிவுட்டில்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X