Don't Miss!
- News
மருமகள் மீது மாமனாருக்கு "காதல்.." 42 வயது வித்தியாசத்தை தாண்டி திருமணம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
- Finance
ஏர் இந்தியா ஒரு வருட வெற்றி.. 500 புதிய விமானம்.. மாபெரும் அறிவிப்பு.. இனி தொடர் ஏறுமுகம் தான்..!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்கள் எந்த விஷயத்தில் சொதப்புவீங்களாம் தெரியுமா? உடனே கரெக்ட் பண்ணிக்கோங்க!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
முகம் சுளிக்கும் ஆபாச வார்த்தைகளால் திட்டிய நாக சைதன்யா ரசிகர்.. பதிலடி கொடுத்த சமந்தா!
ஐதராபாத் : நடிகை சமந்தா இந்திய அளவில் சிறப்பான நடிகையாக காணப்படுகிறார்.
Recommended Video
சமந்தா சமீபத்தில் நாக சைத்தன்யாவுடன் விவாகரத்து முடிவை அறிவித்திருந்தார். இந்த முடிவு இரு தரப்பு ரசிகர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் தற்போது சமந்தா போட்ட பதிவு நாக சைத்தன்யாவின் ரசிகர்களை ஆத்திரத்திற்கு உட்படுத்தியுள்ளது.
எல்லாம்
என்
துரதிர்ஷ்டம்…
நடிகை
வேதிகா
வேதனை..
ஏன்
என்ன
ஆச்சு
பதறிய
ரசிகர்கள்
!

நடிகை சமந்தா
நடிகை சமந்தா இந்திய அளவில் அறிப்படும் நடிகையாக உள்ளார். இவரது அடுத்தடுத்த படங்கள் இவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்து வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இவர் ஏற்று நடித்த கதீஜா கேரக்டர் சிறப்பாக அமைந்தது.

அடுத்தடுத்த படங்கள்
எதையும் பாசிட்டிவ்வாக அணுகும் இந்தக் கேரக்டருக்கு சமந்தா சிறப்பாகவே பொருந்தியிருந்தார். தற்போது இவரது நடிப்பில் யசோதா மற்றும் குஷி படங்கள் உருவாகி வருகின்றன. இதில் யசோதா படம் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதேபோல விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்துவரும் குஷி படமும் பான் இந்தியா படமாகவே வெளியாகும் என கூறப்படுகிறது.

விவாகரத்து முடிவு
கடந்த ஆண்டில் நாக சைத்தன்யாவுடன் விவாகரத்து முடிவை சமந்தா வெளியிட்டார். இவர்களது 4 ஆண்டுகால காதல் வாழ்க்கை இதன்மூலம் முடிவிற்கு வந்தது. இதையடுத்து சமந்தாவுடன் இருந்த நாக சைத்தன்யா பிரிந்தார். இந்த விவாகரத்து முடிவு இரு குடும்பத்தினரிடையே மட்டுமின்றி இருதரப்பு ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆன்மீக பாதையில் சமந்தா
இதையடுத்து இந்த விவாகரத்து முடிவுக்கு காரணமாக சமந்தா கைக்காட்டப்பட்டார். அவர்தான் குழந்தை பெற மறுத்தார் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை அவர்மீது நாக சைத்தன்யா ரசிகர்கள் குற்றச்சாட்டுகளாக அடுக்கினார்கள். இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான சமந்தா சில குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுத்தார். ஆனால் அது தொடரவே அதன்மீது அதிக கவனம் செலுத்தாமல் ஆன்மீக பாதையில் சென்று தன்னை மனஉளைச்சலில் இருந்து மீட்டுக்கொண்டார்.

மற்றொரு நடிகையுடன் டேட்டிங்
இந்நிலையில், தற்போது நாக சைத்தன்யா ஷோபிதா என்ற நடிகையுடன் டேட்டிங்கில் உள்ளதாக வெளியான தகவலையடுத்து, பெண்கள் குறித்த வதந்தி உண்மை என்று கூறுபவர்கள், ஆண்கள் குறித்த வதந்திக்கும் அந்தப் பெண்ணையே காரணமாக கூறுவதாக ட்விட்டர் பக்கத்தில் பொங்கியெழுந்துள்ளார்.

ஆபாச வார்த்தைகளால் திட்டிய ரசிகர்
நாக சைத்தன்யாவின் டேட்டிங் குறித்த வதந்தியை சமந்தாவின் பிஆர் டீம்தான் பரப்பியதாக வெளியான தகவலையடுத்தே அவர் இந்த ட்வீட்டை பதிவு செய்தார். இந்நிலையில் சமந்தாவின் இந்தப் பதிவிற்கு நாக சைத்தன்யாவின் ரசிகர் ஆபாச வார்த்தையால் அவரை திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிலடி கொடுத்த சமந்தா
இதற்கு அவரை கலாய்க்கும்வகையில் பதிலடி கொடுத்துள்ள சமந்தா, தொடர்ந்து அந்தப் பதிவை தன்னுடைய பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். சமந்தாவின் நடவடிக்கைகளில் தற்போது தெளிவும் பயமின்மையும் காணப்படுகிறது. இதை அவரது ரசிகர்களும் வரவேற்று வருகின்றனர்.