படுக்கையில் படுத்துக் கொண்டு அப்படியொரு ரியாக்ஷன்.. நம்ம சமந்தாவா இது என கன்ஃபியூஸ் ஆன ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள குஷி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், மீண்டும் சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாகி உள்ளார் சமந்தா.
குஷி படத்தின் இசை வெளியீட்டு விழா போட்டோக்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் சந்தோஷமாக ஷேர் செய்து வரும் சமந்தா, தற்போது படுக்கையறையில் கூலர்ஸ் அணிந்துக் கொண்டு உதட்டை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கொடுத்துள்ள விவகாரமான போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

வரும் செப்டம்பர் 1ம் தேதி குஷி படம் வெளியாக உள்ள நிலையில், உடல்நலம் சரியில்லாத நிலையிலும் சில சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் போல் ப்ரமோஷனுக்கு வரமாட்டேன் என்று சொல்லாமல் கஷ்டமான நேரத்திலும் தனது படத்தின் மீதான அன்பு காரணமாக தயாரிப்பாளர் தரும் சம்பளத்துக்கும், ரசிகர்களின் அன்புக்காகவும் நடிகை சமந்தாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து கொண்டே வருகிறது.
சாகுந்தலம் டோட்டல் டிசாஸ்டர்: மயோசிடிஸ் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை சமந்தா இந்த ஆண்டு சம்மரில் சாகுந்தலம் படத்தை ரொம்பவே நம்பி இருந்தார். ஆனால், தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு பெரிய தோல்வி படமாகவும் பலத்த நஷ்டத்தையும் சாகுந்தலம் கொடுத்த நிலையில், சமந்தா ரொம்பவே அப்செட் ஆகி விட்டார்.

குஷி மீது நம்பிக்கை: இந்நிலையில், ஓராண்டு ஓய்வு எடுக்க வெளிநாட்டுக்கு சென்றிருந்தாலும் குஷி படத்தின் ரிலீஸை முன்னிட்டு படக்குழு நடத்தும் அனைத்து ப்ரமோஷன்களிலும் கலந்து கொண்டு அசத்தி வருகிறார் நடிகை சமந்தா. சாகுந்தலம் படம் தோல்வி அடைந்த நிலையில், குஷி படம் தனக்கு நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என நம்பிக்கையுடன் உள்ளார்.
லைகர் படம் விஜய் தேவரகொண்டாவுக்கு படுதோல்வி படமாக அமைந்த நிலையில், அவரும் குஷி படத்தின் மீது பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

பெட்ரூமில் சமந்தா: நடிகை சமந்தா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வரும் சமந்தா தற்போது பெட்ரூமில் படுத்துக் கொண்டு செம க்யூட்டாக செல்ஃபி எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

சமந்தா அந்த செல்ஃபி போட்டோவுக்கு கொடுத்த போஸும் அவரது எக்ஸ்பிரஷன்களையும் பார்த்த நெட்டிசன்கள் விவகாரமான கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











