Just In
- 8 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 8 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 8 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 10 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- News
பிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்! .
- Automobiles
மூன்று புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது யமஹா ஆர்15 வி3 பைக்... அனைத்தும் உங்களை நிச்சயம் கவரும்!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஏம்மா சமந்தா, புருஷன் பெயரை அங்கேயா பச்சை குத்துவது?: நெட்டிசன்ஸ்
ஹைதராபாத்: இத்தனை நாட்கள் மறைத்து வைத்திருந்த டாட்டூவை காட்டியுள்ளார் சமந்தா.
சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு நாக சைதன்யாவும், சமந்தாவும் அவரவர் படங்களில் நடிக்கச் சென்றதை அப்பொழுது அனைவரும் வியப்பாக பார்த்தார்கள்.

திருமணத்திற்கு பிறகு சமந்தா தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வெற்றியும் கண்டு வருகிறார். நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா, லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான ஓ பேபி தெலுங்கு படம் இதுவரை ரூ. 17 கோடி வசூல் செய்துள்ளது.
அந்த நடிகை இல்லை இந்த நடிகையை தான் காதலிக்கிறாரா விஜய் தேவரகொண்டா?
இந்த படத்தின் சக்சஸ் மீட் நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. அதில் நடிகர் ராணா கலந்து கொண்டு சிறப்பித்தார். சக்சஸ் மீட்டிற்கு சமந்தா வெள்ளை நிற உடையில் அழகாக வந்திருந்தார். சக்சஸ் மீட்டிற்கு முன்பு நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சமந்தா, இதுவரை மறைத்து வைத்திருந்த டாட்டூவை காண்பித்துள்ளார்.
தனது கணவர் நாக சைதன்யாவின் பெயரை தான் டாட்டூ குத்தி அதை மறைத்து வைத்திருந்திருக்கிறார். டாட்டூ குத்திய இடம் அப்படி என்பதால் அனைவருக்கும் காட்ட முடியாது. சமந்தாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னம்மா புருஷன் பெயரை டாட்டூ குத்த வேறு இடமே கிடைக்கவில்லையா என்று கேட்டுள்ளனர்.
முன்னதாக சமந்தாவும், நாக சைதன்யாவும் கையில் ஒரே மாதிரி டாட்டூ குத்தினார்கள். திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா மார்ஸ் கோடில் ஒரு டாட்டூ குத்தினார். அது அவர்களின் திருமண தேதியாம்.
தன் கணவர் நாக சைதன்யாவுக்கு கோபமே வராது என்று கூறி சமந்தா அடிக்கடி பெருமைப்படுவார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா கவர்ச்சியாக நடிப்பதில் நாக சைதன்யாவுக்கு எந்த பிரச்சனையுமே இல்லையாம். நாக சைதன்யாவும் சரி, அவரின் தந்தையும் நடிகருமான நாகர்ஜுனாவும் சரி சமந்தாவுக்கு ஆதரவாக உள்ளனர். நடிப்பு வேறு நிஜம் வேறு என்பதை பிரித்துப் பார்க்கும் பக்குவம் அவர்களிடம் உள்ளதால் சமந்தா சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.