அப்படி செய்யாததற்கு இதுதான் காரணம்.. அட சமந்தா இவ்வளவு ஓபனாக பேசிட்டாங்களே
சென்னை: நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் நாக சைதன்யா. இதற்கிடையே சமந்தாவிடமிருந்து விவாகரத்தும் பெற்றார் அவர். சமந்தாவை நாக சைதன்யா பிரிந்தது விரும்பத்தகாத விஷயம் என்று பலரும் அவரை விமர்சித்துவருகின்றனர். இந்தச் சூழலில் சமீபத்தில் சமந்தா கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தின்போது இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அந்தக் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேரும் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு பேருக்கும் இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.

இணைந்த மனம்; பிரிந்த உறவு: திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் உச்சக்கட்ட காதலோடு இணைந்து தங்களது வாழ்க்கையை நகர்த்தினார்கள். திருமணத்துக்கு பின்பும் சமந்தா நடிப்பதற்கு தனது முழு ஆதரவை கொடுத்தார் நாக சைதன்யா. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு; தாங்கள் இரண்டு பேரும் பிரிந்து வாழ முடிவெடுத்திருப்பதாக கூறினார்கள். அது உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மையோசிடிஸ்?: அதற்கு காரணம் சமந்தா சினிமாவில் தொடர்ந்து நடித்ததுதான் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அது உண்மை இல்லை சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் காரணம் என்று ஒருதரப்பினர் கூறினார்கள். ஆனால் தங்களது பிரிவுக்கு சைதன்யாவோ, சமந்தாவோ தெளிவான காரணத்தை ஓபனாக சொல்லவில்லை. பிரிவுக்கு பிறகு சமந்தா மையோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் நடிப்பில் பிஸியாகியிருக்கிறார். அந்தவகையில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்த அவர் அடுத்ததாக புதிய வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார்.
சமந்தா பேட்டி: இந்நிலையில் சமந்தா சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தமிழ் படங்களில் ஏன் இப்போது அதிகம் நடிப்பதில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர்,, "நிறைய படங்களில் நடிப்பது எளிமையானதுதான். ஆனால் இதுதான் எனது கடைசி படம் என்று என்னை யோசிக்க வைக்கும் அளவுக்கான படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முக்கியமாக அந்தக் கட்டத்தில்தான் நான் இருப்பதாக உணர்கிறேன்.
படங்கள் தர வேண்டும்: அப்படியான ஒரு தாக்கத்தை சினிமா தர வேண்டும். மேற்கூறியவற்றை நான் முழுவதுமாக நம்பவில்லை என்றால் நான் அந்தப் படங்களில் நடிக்கவேமாட்டேன். ஒரு நடிகையாக சவால் நிறைந்த கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். எனக்கு மன நிறைவு தராத படங்களில் எப்போதும் நான் நடிப்பதே கிடையாது" என்றார்.


Click it and Unblock the Notifications











