விஜய்க்கு ஒரு கெட்டப் பழக்கம் கூட இல்லை.. சமந்தா கொடுத்த சர்டிபிகேட்.. அவரே ஷாக் ஆகிட்டாரு!
சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா ஜோடி போட்டு நடித்துள்ள குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது.
கடந்த சில வாரங்களாக குஷி படத்திற்கு தீவிர ப்ரோமோஷனை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் சென்னை, ஹைதராபாத் என இரு மாநிலங்களிலும் நடத்தி வருகின்றனர்.

இந்த படம் இருவருக்குமே கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் சமந்தா ப்ரோமோஷன்களில் கலந்து கொண்டு வருகிறார்.
விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம்: நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த ஆண்டு இறுதியிலே திருமணம் நடக்கப் போவதாக குஷி படத்தின் பேட்டியிலே ரிவீல் செய்து விட்டார் நடிகை சமந்தா.
அய்யோ இப்போலாம் திருமணம் செய்துக் கொள்ளமாட்டேன், இன்னும் 2 அல்லது 3 வருஷம் ஆகும் என விஜய் தேவரகொண்டா சட்டென சிரித்துக் கொண்டே சமந்தா சொன்னதற்கு மாறுபட்ட கருத்தை சொல்லி விட்டார் விஜய் தேவரகொண்டா. ஆனால், யாரை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் விஜய் தேவரகொண்டா என்பதை மட்டும் சமந்தா சொல்லவில்லையே என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
கெட்டப்பழக்கம் இல்லை: விஜய் தேவரகொண்டா பிரபலம் ஆனதே அர்ஜுன் ரெட்டி படத்தில் தான். அந்த படத்தில் குடியும் குடித்தனமுமாக இருந்து வந்த ரவுடி பாய் விஜய் தேவரகொண்டாவுக்கு எந்தவொரு கெட்டப் பழக்கம் இல்லை என சமந்தா அந்த பேட்டியில் சொல்ல ரசிகர்கள் பால்ரும் ஷாக் ஆகிவிட்டனர்.
பார்ட்டிக்கு சென்றால் கூட ஒரே ஒரு ஒயின் கிளாஸை வைத்துக் கொண்டு பல மணி நேரங்கள் குடிக்காமலே பார்த்துக் கொண்டிருப்பார் விஜய் தேவரகொண்டா என்றும் சமந்தா ஓபனாக சொல்லி விட விஜய் தேவரகொண்டாவுக்கே வெட்கம் வந்து விட்டது.

ஹெல்த் மீது கவனம்: மறுநாள் காலையில், ஜிம்முக்கு போக வேண்டும், இரவில் சீக்கிரமே தூங்கிடுவாரு, தனது ஹெல்த் மீது அதிக கவனம் வைத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா அதன் காரணமாகவே எந்தவொரு கெட்டப்பழக்கமும் இல்லாமல் இருக்கிறார்.
ஆனால், இவரை பார்த்தால் யாருமே அப்படிப்பட்டவர் என நம்பவே மாட்டார்கள். ஆனால், நீங்க நம்பினாலும் இதுதான் நிஜம் என சமந்தா விஜய் தேவரகொண்டாவுக்கு சூப்பர் சர்டிபிகேட் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











