சமந்தாவிற்கும் ராஜ் நிதிமோருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எதற்காக இந்த திருமணம்!

சென்னை: நடிகை சமந்தா ரூத் பிரபுவும், பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோருவும் பல மாதங்களாக காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில், நேற்று இவர்களில் திருமணம் கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண போட்டோவை பதிவிட்டுள்ளார். பலரும் சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இவர்களது இருவருக்கும் உள்ள வயது வித்தியாசமும் தற்போது பேசு பொருளாகி உள்ளது.

பானா காத்தாடி படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சமந்தா, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். இவர், ஏப்ரல் 28ந் தேதி 1987 ஆம் ஆண்டு சென்னையில் பறிந்தார். தற்போது சமந்தாவிற்கு 38 வயதாகிறது. பிரபல இயக்குநரான ராஜ் நிடிமோரு ஆகஸ்ட் 4ந் தேதி 1979ஆம் ஆண்டு பிறந்தவர், அவரது வயது 46. இந்த புதுமணத் தம்பதியினருக்கு இடையே எட்டு ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது.

Samantha Ruth Prabhu Raj Nidimoru age
Photo Credit:

நடிகை சமந்தா: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோவிலில் நேற்று பூதசுக்தி விவாஹா முறைப்படி இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.இந்த திருமணத்தில் வெறும் 30 நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சமந்தா தனது திருமண போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார். சமந்தா, சிவப்பு ஜரிகை புடவை மற்றும் தங்க நகைகளுடன் தென்னிந்திய மணப்பெண் கோலத்தில் மின்னினார். ராஜ் வெள்ளை குர்தா மற்றும் பழுப்பு நிற நேரு ஜாக்கெட்டில் அணிந்திருந்தார். சடங்குகளின் ஒரு பகுதியாக இருவரும் மோதிரங்களை மாற்றிக்கொண்டனர்.

2வது திருமணம்: 2024 ஆம் ஆண்டு முற்பகுதியிலேயே இவர்கள் இருவரும் குறித்தும் கிசுகிசு பரவின. இவர்கள் பல நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்து கொண்டனர். சமந்தாவும் ராஜும் இணைந்து 2021ஆம் ஆண்டு வெளியான தி ஃபேமிலி மேன் 2 பணியாற்றினார்கள். அதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு சிட்டாடல்: ஹனி பன்னி தொடரிலும் இணைந்து பணியாற்றினார்கள். அந்த தொடர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவர்கள் அடுத்ததாக ரக்த பிரம்மாண்டம்: தி பிளடி கிங்டம் பணியாற்றி உள்ளனர். அந்த தொடர் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவருக்கும் இது இரண்டாவது திருமணமாகும். சமந்தா முன்னதாக நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கருத்துவேறுபாடு காரணமாக விரிந்தார். இயக்குநர் ராஜ் நிடிமோரு 2022 ஆம் ஆண்டு ஸ்யாமலி தே என்பவரை விவாகரத்து செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X