உங்களுக்கு பொருத்தமானவன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க ப்ளீஸ்.. சமந்தாவிடம் கெஞ்சிய ரசிகர்!
சென்னை: தெலுங்கு நடிகர் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் வியாழக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது தொடர்பான போட்டோக்களை நாகர்ஜுனா பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இவர்களின் நிச்சயத்திற்கு பிறகு நடிகை சமந்தாவிற்கு திருமண ப்ரபோசல்கள் நிறைய வந்துள்ளன.
நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் கடந்த 2017 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சிறந்த நட்சத்திர ஜோடியாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு பிரிவை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதன்பிறகு நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆந்திராவைச் சேர்ந்த சோபிதா துலிபாலா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'வானதி' என்கிற கதாபாத்திரத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நாக சைதன்யா, சோபிதா துலிபாலா: இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், அடிக்கடி டேட்டிங் செல்வதாக இணையத்தில் பல தகவல்கள் பரவிய நிலையில், வியாழக்கிழமை காலை 9.42 மணி அளவில் ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜூன் வீட்டில் நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நெருங்கிய சொந்தங்கள் முன்நிலையில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த போட்டோக்களை நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கல்யாணம் பண்ணிக்கோங்க ப்ளீஸ்: இந்நிலையில் சமந்தாவின் தீவிர ரசிகரான முகேஷ் சிந்தா என்கிற ரசிகர் ஒருவர், சமந்தாவின் வீட்டை பார்த்தபடி நின்று கொண்டு, முழங்காலிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கெஞ்சி உள்ளார். நீங்க எதற்கும் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் நான் எப்போதும் அவளுக்காகவே இருப்பேன். உங்களுக்கு பொருத்தமான ஜோடி தான் தான், எனக்கான இரண்டு ஆண்டுகள் மட்டும் காத்திருங்கள் நான் தேவையான பணத்தை சம்பாதிட்டுவிட்டு வருகிறேன் என்று கூறியது மட்டுமில்லாமல், marry me Samantha please எந்த வீடியோவில் கெஞ்சி உள்ளார்.
இந்த உலகத்திற்கு எதிரானவன்: அது மட்டுமில்லாமல், இந்த வீடியோவிற்கு கேப்ஷனாக, சமந்தாவுக்கு எதிராக இந்த உலகம் இருந்தால், நான் உலகத்திற்கு எதிரானவனாக இருப்பேன் என்று எழுதினார் உள்ளார். இந்த வீடியோவை பார்த்த சமந்தாவும் இதற்கு பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இணையவாசிகள் பலர் , சமந்தாவிற்கு இன்னும் எத்தனை ப்ரொபஷல்கள் வரப்போகிறதோ என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











