shaakuntalam public review : சமந்தாவின் சாகுந்தலம் சூப்பரா? சுமாரா மக்கள் கருத்து !
சென்னை : சமந்தா லீட்ரோலில் நடித்த சாகுந்தலம் திரைப்படம் இன்று வெளியான நிலையில் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன் நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
புராணக்கதையான சாகுந்தலம் கதை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சமந்தா சகுந்தலையாக நடித்துள்ளார். துஷ்யந்தனாக தேவ் மோகன் நடித்திருக்கிறார்.
சாகுந்தலம் : சரித்திர கதையம்சம் கொண்ட இப்படமாக 3டியில் வடிவில் இன்று வெளியாகி உள்ளது. தெலுங்கில் உருவான சாகுந்தலம் திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக இன்று வெளியாகி உள்ளது. இப்படபத்தில் சமந்தா, தேவ் மோகன், அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா முதல் முறையாக இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அருமையான நடிப்பு : சமந்தாவின் நடிப்பை பற்றி குறையே சொல்ல முடியாது, இந்த படத்தில் சமந்தாவின் நடிப்பு சூப்பர் . திரைக்கதை சிறப்பாக இருக்கிறது. பாடல்கள் சுமார் ரகம். அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹாவின் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கிறது. சமந்தாவின் நடிப்பு ஒருகையில் சூப்பர் என்றால், படத்தின் ஒட்டுமொத்த கதையும் தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் தேவ் மோகன்.
பிஜிஎம் வேற லெவல் : சமந்தாவிற்காகத்தான் வந்தேன் படம் நல்ல இருக்கு குறிப்பாக இரண்டாம் பாகம் சிறப்பாக வந்துள்ளது. விஎஃப்எக்ஸ், . பிஜிஎம் வேற லெவல் இது சமந்தாவின் ஒன் மேன் ஷோ.சாதாரண படங்களை விட சிறப்பாக இருக்கிறது. சமந்தாவின் நடிப்பு எப்பப்பா சொல்லவே வேண்டாம் என்று படம் பார்த்த ஒரு ரசிகை கூறியுள்ளார்.
மக்களுக்கு பிடிக்கும் : சாகுந்தலம் படத்தை நிச்சயம் குடும்பத்தோடு பார்க்கலாம், படத்தில் கதை இருந்தால் அந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பு இருக்கும் அந்த வகையில், படத்தில் நல்ல கதை இருப்பதால், மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும். பிகில் படத்தில் வரும் பாடல் மாதிரி சமந்தா சிங்கப் பெண்ணாக மிரட்டி இருக்கிறார்.

உணர்ச்சிப்பூர்வமான கதை : இந்த மாதிரி ஒரு படத்தை கொடுத்த சாகுந்தலம் படக்குழுவிற்கு நன்றி சொன்ன ஒரு ரசிகர், முதல் பாதியைவிட இரண்டாம் பாதி ரொம்ப சூப்பராக இருந்தது ஏன் என்றால், இரண்டாம் பாதியில் செட் ரொம்ப நல்ல இருந்தது. சாகுந்தலையாக வந்த சமந்தா கர்ப்பிணியாக இருக்கும் போது அவமானப்படும் காட்சி உண்மையில் உணர்ச்சிப்பூர்வாக இருந்தது என்று சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











