யம்மாடியோ... சிட்டாடல் வெப் தொடரில் நடிக்க… இருமடங்கு சம்பளத்தை உயர்த்திய சமந்தா!

சென்னை :நடிகை சமந்தா சிட்டாடல் வெப் தொடரில் நடிப்பதற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சமந்தா சாகுந்தலையாக நடித்திருந்தார்.

பல கோடி பொருட் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ.20 கோடிக்கு மேல் நஷ்டத்தைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

சிட்டாடல் வெப் தொடர் :ஃபேமிலி மேன் 2 இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் சிட்டாடல் என்ற வெப் தொடரில், வருண் தவானுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இந்த தொடர் ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்த சிட்டாடல் என்ற வெப் தொடரின் இந்தி ரீமேக் ஆகும். மேலும் இந்த வெப் தொடரில் நடிகை பிரியங்கா சோப்ரா படுக்கை அறை காட்சி, முத்தக்காட்சி என படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

பிரியங்கா சோப்ராவின் அம்மா :ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் இந்த வெப் சீரிஸில் சமந்தாவின் கதாபாத்திரம் செம்ம வெயிட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. பிரியங்கா சோப்ராவின் அம்மாவாக சமந்தா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கதையில் வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் சமந்தா, வருண் தவான் நடிக்கவுள்ளார்களாம். சிட்டாடல் தொடரின் இந்தியப் பதிப்பு முழுவீச்சில் தயாராகி வருகிறது.

samantha ruth prabhu salary for citadel web series

இரு மடங்கு சம்பளம் :இந்நிலையில் சிட்டாடல் வெப் தொடருக்காக நடிகை சமந்தா தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த சமந்தா, சிட்டாடல் வெப் தொடரில் நடிக்க 10 கோடி வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் தற்போது சமந்தாவும் இணைந்துள்ளார்.

ஐட்டம் பாடலுக்கு :அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலில், உச்சகட்ட கவர்ச்சியில் சமந்தா நடனம் ஆடியது. திரையுலகினரை மட்டுமல்லாது ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. படத்தில் 3 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த பாடலுக்காக கவர்ச்சி நடனம் ஆடிய நடிகை சமந்தா ரூ.5 கோடி சம்பளமாக பெற்றார். அந்த படத்திற்கு பிறகே சமந்தாவின் சம்பளம் ஏகத்திற்கும் உயர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X