Don't Miss!
- News
திமுக எம்.எல்.ஏ. அணிவித்த பணமாலை! வாங்க மறுத்த கனிமொழி! கடைசியில் அந்த பணம் எங்கே போனது தெரியுமா?
- Finance
ஈக்விட்டி F&O முதலீட்டாளர்கள் ஷாக்.. 89% பேருக்கு நஷ்டம்..!
- Sports
ஐபிஎல் தொடருக்கு வந்த ஆபத்து.. கடும் அதிருப்தியில் அணி நிர்வாகிகள்.. எப்படி சமாளிக்கும் பிசிசிஐ
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
காதல் காவியம் ‘சாகுந்தலம்‘..சமந்தா படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதான்!
சென்னை : சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
புராணக்கதையான சாகுந்தலம் கதையைக்கொண்டு தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் சாகுந்தலம். இந்த காவியத்தில் வரும் சாகுந்தலை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருக்கிறார்.
மேலும் இப்படத்தில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ்,மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கன்னம்
எல்லாம்
டல்
ஆகிப்
போச்சே..
பீனிக்ஸாய்
மீண்டும்
வரும்
சமந்தா..
நியூ
இயர்
ரெசல்யூசனை
பாருங்க!

நடிகை சமந்தா
நடிகை சமந்தாவுக்கு கடந்த 2022ம் ஆண்டு சறுக்கல்களும் ஏற்றங்களும் நிறைந்த ஆண்டாகவே இருந்தது எனலாம். அல்லுஅர்ஜூன் செம்மரங்களை கடத்தும் கடத்தல் மன்னனாக நடித்த திரைப்படம் தான் புஷ்பா. தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான இத்திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தில் சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு படத்தின் நாயகி ராஷ்மிகாவையே பின்னுக்கு தள்ளிவிட்டார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்
இந்த படத்தை தொடர்ந்து தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி,நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தன. இதிலும், நயன்தாராவை விட சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

கண்கலங்கிய சமந்தா
இதையடுத்து,சமந்தா யசோதா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்பட்டது. இதையடுத்து, யசோதா படத்தின் ப்ரோமோனுக்காக போட்டி அளித்த சமந்தா,மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், பல கஷ்டங்களை கடந்து இன்னும் நான் உயிரோடு இருக்கிறேன் என உருக்கத்துடன் பேசி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தினார்.

அசத்திய சமந்தா
இதையடுத்து, திரையரங்கில் வெளியான யசோதா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் வாடகைத்தாய் முறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது. இந்த படத்தில் வரும் பல சண்டை காட்சிகளில் சமந்தா டூப்பே இல்லாமல் நடித்திருந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் சண்டை காட்சியில் அவர் பின்னியெடுத்திருந்தார்.

சாகுந்தலம்
இந்நிலையில்,நடிகை சமந்தா நடித்துள்ள காவியக் காதல் திரைப்படமான சாகுந்தலம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அனுஷ்கா நடித்த ருத்ரமா தேவி படத்தை இயக்கிய இயக்குனர் குணசேகரன் இப்படத்தை இயக்கி உள்ளார். சகுந்தலை என்ற முதன்மை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.

5 மொழிகளில் ரிலீஸ்
தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ள 3டியில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் நம்பவர் மாதமே வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதையடுத்து, சாகுந்தலம் படம் பிப்ரவரி 17ந் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.