Samantha: சமந்தாவின் இரண்டாவது திருமணம்.. பிரபல ஜோதிடர் சொன்ன ஒற்றை வார்த்தை!

ஹைதரபாதா:ம் நடிகை சமந்தா பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ராஜ் நிதிமோருவை நேற்று அதாவது டிசம்பர் 1ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். தனிப்பட்ட முறையில் நடைபெற்ற இத்திருமணம், தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளையின் யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோவிலில், பூதசுத்தி பாரம்பரிய முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சூழ நடைபெற்ற இத்திருமணத்தை சமந்தா மற்றும் அவரின் நண்பர்கள் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்த பின்னர் தான் தகவல்களே வெளியானது.

திருமணச் செய்தி வெளியான நிலையில், சமந்தாவின் முதல் திருமணம், கடந்த கால உறவுகள் குறித்த விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளன. ரசிகர்கள், நெட்டிசன்கள், திரையுலகினர் எனப் பலரும் புதிய வாழ்க்கை குறித்து கருத்துக்களையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்தனர். ஜோதிடர்களும் தங்களது கணிப்புகளை வெளியிடத் தொடங்கினர்.

Samantha RuthPrabhu Raj Nidimoru Second Marriage astrologer Venu Swamy Parankusham amp amp Public Reaction
Photo Credit:

குறிப்பாக, ஜோதிடர் வேணு சுவாமி இந்த திருமண விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக, சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் திருமணம், விவாகரத்து குறித்த அவரது கணிப்புகள் பெரும் சர்ச்சையை கிளப்பி, பரவலான விவாதத்திற்கு வழிவகுத்தன.

ஜோதிடர்: சமந்தாவின் திருமணம் குறித்து தனக்கு வந்த அழைப்புகள் பற்றி ஜோதிடர் வேணு சுவாமி சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசியுள்ளார். "காலை முதல் எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. சமந்தா இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்று கேட்கிறார்கள்" என்றார். எனினும், யார் மீதும் கருத்து தெரிவிக்க தான் விரும்பவில்லை என்றும், மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொருட்படுத்தாமல் தனது வேலையைச் செய்து கொண்டே செல்வேன் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அவரது இந்தக் கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ரசிகர்கள்: வேணு சுவாமியின் கருத்துகள் வெளியானதும், நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. சிலர், சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது உரிமை என்றும், இதுபோன்ற ஜோதிடக் கருத்துகள் தேவையில்லை என்றும் கண்டிக்க, வேறு சிலரோ ஜோதிடரின் முந்தைய கணிப்புகள் உண்மையானதாகிவிட்டதாக தெரிவித்தனர். சமந்தாவின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஆதரவாகப் பதிவிட்டு வருகின்றனர். "அவரது கடந்த காலம் முடிந்துவிட்டது, புதிய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார், அவர் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம்" என்று குறிப்பிட்டுள்ளனர். சமந்தா - ராஜ் நிதிமோரு திருமணம் மட்டுமல்லாது, அதுகுறித்த ஒவ்வொரு எதிர்வினையும் சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X