Samantha: நான் அழல.. அல்லு அர்ஜுனின் ரியல் ரொமான்ஸைப் பார்த்து சமந்தா எமோஷ்னல்.. தங்கமான மனசு!
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, அதன் பின்னர் இடைக்கால ஜாமீனில் வெளிவந்த கதை அனைவருக்கும் தெரிந்ததே என்றாலும் இதன் அதிர்வலைகள் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை. அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது தொடர்பாக தெலுங்கு திரையுலகம் முழுவதும் அவருக்கு ஆதரவாக நின்றது. அதேநேரத்தில், தெலங்கானா முதலமைசர் ரேவந்த் ரெட்டி இது தொடர்பாக பேசும்போது, ஒரு நடிகர் கைது செய்யப்பட்டது குறித்துத்தான் நீங்கள் அனைவரும் பேசுகின்றீர்கள்.
ஆனால், ஒரு அப்பாவி தாய் இறந்தது குறித்து யாரும் பேசாமல் உள்ளீர்கள். அதேபோல் கோமாவில் உள்ள, அவரது மகன் குறித்து யாரும் வாய் திறக்க மறுக்கின்றீர்கள். அவர்கள் பக்கம் தெலங்கனா அரசு நிற்கும் எனக் கூறினார். இப்படியான நிலையில் அல்லு அர்ஜுன், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பின்னர், அவரது மனைவி, அவரை கட்டிபிப் பிடித்து முத்தம் கொடுத்து வரவேற்றார். இது தொடர்பாக சமந்தாவின் ரியாக்ஷன் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் காட்சியைப் பார்க்க, ஹைதாராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு, டிசம்பர் 4ஆம் தேதி நள்ளிரவு வந்தார். ப்ரீமியர் ஷோ பார்க்க ஏற்கனவே அங்கு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தியேட்டரின் வெளியே காத்துக் கொண்டு இருந்தனர். அந்த நேரம் பார்த்து அல்லு அர்ஜுன் அங்கு வந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் நெரிசல் அதிகரித்தது.

இந்த நெரிசலில் சிக்கி, ரேவதி என்ற 25 வயது ரசிகை இறந்துவிட்டார். மேலும் அவரது மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகன் தற்போது கோமாவில் உள்ளார். அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. இப்படியான நிலையில், அல்லு அர்ஜுன் முன் அறிவிப்பு இன்றி படம் பார்க்க வந்துவிட்டார். அவர் முன்பே கூறியிருந்தால் அதற்கு ஏற்றவாறு, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்போம் என தெலங்கானா காவல்துறை தெரிவித்தது.

அல்லு அர்ஜுன்: இதனால், அல்லு அர்ஜுன் மீதும், சந்தியா தியேட்டர் ஓனர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அப்போது அழுது கொண்டு இருந்த அவரது மனைவிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து, தைரியமாக இருக்க வேண்டும் எனக் கூறிவிட்டு, காவல்துறையினருடன் சென்றார். அதன் பின்னர் மாவட்ட நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கச் சொன்னது. இதனால் அல்லு அர்ஜுனை, சஞ்சல்குடா மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

சிறை: அதன் பின்னர், அல்லு அர்ஜுன் தரப்பில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில், இடைக்கால ஜாமீனுக்கு, மனு அளித்தனர். இப்படியான நிலையில், தெலங்கானா உயர்நீதிமன்றம், இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் தொடர்பான ஆவணங்களை தயார் செய்வதில், காலதாமதம் ஆனதால், அல்லு அர்ஜுன் ஒரு இரவு சிறையில் இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதாவது, டிசம்பர் 13ஆம் தேதி மாலை தொடங்கி, 14ஆம் தேதி காலை வரை, சிறையில் இருந்தார்.

சமந்தா கமெண்ட்: அதன் பின்னர் சிறையில் இருந்து, வீட்டுக்குத் திரும்பிய பின்னர், அவரது மனைவி, அல்லு அர்ஜுனைக் கட்டிப் பிடித்து, கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த, சமந்தா, நான் அழலயே என கேப்ஷன் இட்டு, அல்லு அர்ஜுன் மற்றும் அவரது மனைவி சினேஹா ரெட்டியை டேக் செய்துள்ளார். இது பலரது, கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











