மனசு முழுக்க இருக்கு.. கீர்த்தி சுரேஷ்க்கு சமந்தா சொன்ன திருமண வாழ்த்து.. பழசை நினைத்து உருகுறாங்களோ?
சென்னை: நேற்று ஒட்டுமொத்த திரையுலகிலும் ஒரே பரபரப்பான மற்றும் முக்கியமான நாளாக மாறிவிட்டது. அதாவது, ஒரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள். மறுபக்கம் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் வெற்றி விழா, மற்றொன்று நடிகை கீர்த்தி சுரேஷ்ஷின் திருமணம் என ஒரே பரபரப்புதான். இப்படியான நிலையில் கீர்த்தி சுரேஷ்ஷின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய், த்ரிஷா போன்ற தென்னிந்திய திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகை சமந்தா கீர்த்தி சுரேஷ்க்கு திருமண வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலரும் தொழில் அதிபருமான ஆண்டனியை நேற்று அதாவது டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் முதலில் இந்து முறைப்படி, கோவாவில் நடைபெற்றது. திருமணத்தில் கலந்து கொள்ள பல திரைப்பிரபலங்களுக்கு அழைப்பிதழை கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினர் வழங்கினர். நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் மிகவும் கோலாகலமாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது.

இவரது திருமணப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பரவியது. குறிப்பாக மணமகள் கீர்த்தி சுரேஷ் பேரழகியாக காட்சி அளிக்க, திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இவர்களது திருமணத்தில் நடிகர் விஜய் வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டார். விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் இரண்டு படங்களில் நடித்துள்ளார். பைரவா மற்றும் சர்கார் ஆகிய படங்களில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். அதேபோல் திருமணத்திற்குப் போன த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பரிமாறப்பட்ட கல்யாண விருந்தினை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

சமந்தா: இந்நிலையில் நடிகை சமந்தா, கீர்த்தி சுரேஷ்க்கு திருமண வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் பகிர்ந்திருந்த திருமணப் புகைப்படத்தில் ஒன்றினை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து, "இந்தப் புகைப்படம் எனது இதயம் முழுவதும் நிறைந்து உள்ளது. திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ள உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துகள். உங்களுக்கு எப்போதும் என் அன்பும் வாழ்த்தும்" என எழுதியுள்ளார்.

ரசிகர்கள்: சமந்தாவின் இந்த போஸ்ட்டினைப் பார்த்த ரசிகர்கள், உண்மையாலுமே சமந்தா பகிர்ந்துள்ள புகைப்படத்தினைப் பார்க்கும்போது கீர்த்தி சுரேஷ்ஷும் அவரது காதல் கணவர் ஆண்டனியும் மிகவும் அழகாக உள்ளார்கள். மேலும் இந்தப் புகைப்படத்தில் அவர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளார்களோ அதே அளவுக்கு வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

கமெண்ட்: அதேநேரத்தில் இணையவாசிகளில் ஒரு பகுதியினர், சமந்தா, கீர்த்தி சுரேஷ்ஷின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. மேலும் சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டதும் கோவாவில்தான். அதனால்தான் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் சமந்தா கலந்து கொள்ளவில்லை. மேலும் திருமணப் புகைப்படங்களைப் பார்க்கும்போது, அவரது திருமணம் குறித்த நினைவுகள் சமந்தாவுக்கு வந்திருக்கும் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











