twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாவ் சமந்தா... 15 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய நடிகை சமந்தா!

    By Vignesh Selvaraj
    |

    ஐதராபாத் : நடிகை சமந்தா தலைமையில் இயங்கும் 'பிரதியுஷா' தொண்டு நிறுவனம் சார்பில் விஜயவாடாவில் 15 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    நடிகை சமந்தா நடிக்க வந்த காலத்திலிருந்தே சமூகப் பணிகளிலும் ஆர்வம் கொண்டவராகச் செயல்பட்டு வந்தார். தனது சம்பளத்தைக் கொண்டு ஏழைக் குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.

    திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் மிகுந்த மனிதநேயம் கொண்டவராக இருக்கும் சமந்தாவை ரசிகர்கள் இதனால்தான் கொண்டாடி வருகிறார்கள்.

    சமந்தாவின் தொண்டு நிறுவனம்

    சமந்தாவின் தொண்டு நிறுவனம்

    2012-ம் ஆண்டு 'பிரதியுஷா' எனும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி ஏழைக் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவ உதவிகளை தனது மருத்துவ நண்பர்களோடு செய்து வருகிறார் சமந்தா. இந்த அமைப்பால் பல குழந்தைகள் இதுவரை பயனடைந்திருக்கிறார்கள்.

    பிரதியுஷா

    'பிரதியுஷா' தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, நடத்தி வரும் சமந்தா, குழந்தைகளுக்கு ஏற்படும் மருத்துவக் குறைபாடுகளைக் களைவதற்காக நிதி வேண்டி தன்னுடன் நடித்த நடிகர்களை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார்.

    இருதய அறுவைச் சிகிச்சை

    சமீபத்தில், தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் 15 குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். விஜயவாடாவில் நடைபெற்ற இருதய அறுவைச் சிகிச்சை முகாமில் 15 குழந்தைகளுக்கும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஆரோக்கியமான இதயத்துடன் வாழ்கிறார்கள்.

    ரசிகர்கள் வாழ்த்து

    ரசிகர்கள் வாழ்த்து

    சமந்தாவின் சமூக நோக்கம்கொண்ட செயலுக்காக அவரை பலரும் ட்விட்டரில் வாழ்த்தி வருகிறார்கள். சமந்தாவின் இந்த கருணைப் பார்வை மற்ற திரைப் பிரபலங்களையும், ரசிகர்களையும் சமூகப் பணி செய்யத் தூண்டும் எனவும் பலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

    English summary
    Actress Samantha is founded a charity trust 'Pratyusha Organisation'. Currently, 15 children are undergoing cardiac surgeries at andhra hospitals, Vijayavada by pratyusha organisation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X