இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான நாகசைதன்யா?… ஆனால்… ஒரே கண்டிஷன்!

சென்னை : தெலுங்கு நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைத்துறையில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த சமந்தாவும் நாகசைத்தன்யாவும் பிரிந்தது. திரைத்துறைக்கு மட்டுமல்ல அவர்களது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நாகசைதன்யாவின் 2வது திருமணம் குறித்த பேச்சு டோலிவுட்டில் அடிபட்டு வருவதால், இனி இவர்கள் சேரவே வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர்.

நாகசைத்தன்யா, சமந்தா

நாகசைத்தன்யா, சமந்தா

நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பான 'யே மாய சேசாவே' படத்தின் இணைந்து நடித்திருந்தனர். முதல் படத்திலிருந்த இவர் இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து, பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறினார் சமந்தா.

காதல் திருமணம்

காதல் திருமணம்

இதையடுத்து, சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் பலத் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகைகள் பட்டியலில் இருந்தார் சமந்தா. இதையடுத்து, சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாகசைதன்யாவின் குடும்ப பெயரை எடுத்துவிட்டு வெறும் 'S' என்று மட்டும் பதிவிட்டதால். இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் மனக்கசப்பு வெளியே தெரியத் தொடங்கியது.

பிரிந்தனர்

பிரிந்தனர்

இவை அனைத்தும் வெறும் வதந்திதான் என்று நினைத்து வந்த நேரத்தில் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இவர்களது பிரிவு ரசிகர்களை மட்டுமில்லாது திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில், திருமண புடவையை நாகசைதன்யா குடும்பத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டார் சமந்தா. இதனால் இனி இவர்கள் சேரவே வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இதனால், நாகசைதன்யாவின் பெற்றோர்களான நாகார்ஜுன் மற்றும் அமலா நாகசைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு நாகசைதன்யா ஒகே சொல்லிவிட்டதாகவும், ஆனால், நடிகை வேண்டாம் என்று பெற்றோருக்கு கண்டிஷன் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து அவர்களுடைய குடும்பம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படங்களில் பிஸி

படங்களில் பிஸி

ஆனால், சமந்தாவோ விவகாரத்துக்குப்பின் சகுந்தலம், யசோதா, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில், காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் 28ந் தேதி வெளியாகி உள்ளது. இதில்,சமந்தா,நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X