மருமகன் ரொம்ப நல்லவன்.. தீயாய் பரவும் சமந்தா அப்பாவின் ஃபேஸ்புக் பதிவு.. என்ன நடக்குது!

ஹைதராபாத்: நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ரசிகர்களுக்கு மட்டுமல்ல நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கும் சமந்தாவின் குடும்பத்தினருக்குமே இது ஒரு பேரதிர்ச்சி தான்.

இந்நிலையில், சமந்தாவின் அப்பா நாக சைதன்யா பற்றி பதிவிட்டுள்ள உருக்கமான ஃபேஸ்புக் போஸ்ட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து

சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து

முதல் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நாக சைதன்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா. திருமணத்துக்குப் பிறகு குழந்தை எதுவும் பெற்றுக் கொள்ளாமல் இருவரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தனர். அடிக்கடி கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேட்டிகளில் புகழ்ந்து பேசி வந்தனர். இந்நிலையில், அவர்களூக்கு இடையே என்ன பிரச்சனை நேர்ந்ததோ தெரியவில்லை திடீரென இருவரும் பிரிவதாக அறிவித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

சமந்தா அப்பா ஷாக்

சமந்தா அப்பா ஷாக்

ரசிகர்கள், பிரபலங்கள் போலவே நடிகை சமந்தாவின் அப்பா ஜோசப் பிரபுவும் இருவரது முடிவை அறிந்து ரொம்பவே அதிர்ச்சி அடைந்ததாக தற்போது அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சமந்தா - நாக சைதன்யாவின் திருமண வரவேற்பு புகைப்படங்களை பதிவிட்டு அவர் பதிவிட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மருமகன் ரொம்ப நல்லவன்

மருமகன் ரொம்ப நல்லவன்

சமந்தாவின் முடிவு ஆரம்பத்தில் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், அந்த முடிவு அவர் எடுத்தது என்பதால் நான் எதுவுமே சொல்ல முடியவில்லை. எனக்கு சமந்தாவும், நாக சைதன்யாவும் ஒன்று தான். நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறேன். விரைவில் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும் என நினைக்கிறேன் என சமந்தா அப்பா பதிவிட்ட போஸ்ட்டை நாக சைதன்யா ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

சமந்தா தான் ஸ்டார்ட் பண்ணார்

சமந்தா தான் ஸ்டார்ட் பண்ணார்

தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் இருந்து கணவர் நாக சைதன்யாவின் அக்கினேனி குடும்பத்தின் பெயரை நீக்கியது சமந்தா தான். அதன் பின்னர் தான் சமந்தா நாக சைதன்யாவை பிரிகிறாரா? என கேள்விகள் எழுந்தன. ஆரம்பத்தில் இருவரும் அமைதியாக இருந்து வந்த நிலையில், பின்னர் இருவரும் அதனை ஒப்புக் கொண்டனர்.

நாக சைதன்யா படம் ஃபிளாப்

நாக சைதன்யா படம் ஃபிளாப்

தன்னை விட தனது மனைவி சமந்தா பாலிவுட்டில் தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் மூலம் என்ட்ரி கொடுத்து விட்டார் என்கிற போட்டி மனப்பான்மை தான் இருவரையும் பிரித்ததாக சில தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து அமீர்கான் படமான லால் சிங் சத்தா மூலம் நாக சைதன்யா பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க நினைத்தார். ஆனால், அந்த படம் படு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X