என்ன சம்மு இப்படி பண்ணீட்டீங்களே: சமந்தா ரசிகர்கள் வருத்தம்
Recommended Video

இணையத்தில் லீக்கான சமந்தா ராம்சரண் புகைப்படங்கள்..
சென்னை: சமந்தா தனது தலை முடியை நறுக்கியது அவரின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
2016ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான கன்னட படமான யு டர்ன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. பவன் குமார் இயக்கும் இந்த படத்தில் சமந்தா, ஆதி, ராகுல் ரவீந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை ராஜமுந்திரியில் துவங்கியது. ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு வந்த சமந்தாவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடினர். சமந்தா தனது தலைமுடியை நறுக்கி புதிய கெட்டப்பில் இருந்தார்.
அவர் தலைமுடியை நறுக்கியதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். நீளமாக அழகாக இருந்த கூந்தலை இப்படியா செய்வது என்று ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
சமந்தா புதிய லுக்கிலும் நன்றாகத் தான் இருக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











