முத்தமிட நெருங்கினாலும்.. நாக சைத்தன்யாவின் முதல் மனைவி குறித்து சமந்தா பகிர்ந்த தகவல்!

ஐதராபாத் : நடிகர் நாக சைத்தன்யா இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவரது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தன்னுடைய தசை அழற்சி நோய்க்காக ஐதராபாத்தில் மருத்துவமனையில் சேர்ந்து நடிகை சமந்தா சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நாக சைத்தன்யா குறித்து சமந்தா பேசிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் நாக சைத்தன்யாவின் முதல் மனைவி குறித்து சமந்தா பேசியுள்ளார்.

சமந்தா -நாக சைத்தன்யா ஜோடி

சமந்தா -நாக சைத்தன்யா ஜோடி

நடிகை சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். முன்னதாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருவரும் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்ட இவர்களது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் நிறைவுக்கு வந்தது. பிரிந்து வாழும் முடிவை இருவரும் கடந்த ஆண்டில் வெளியிட்டனர்.

மீண்டும் மருத்துவமனையில் சமந்தா சிகிச்சை

மீண்டும் மருத்துவமனையில் சமந்தா சிகிச்சை

ஆதர்ச தம்பதிகளாக அறியப்பட்ட இவர்களது திருமண முறிவு இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னதாக தி பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகையாக சமந்தா மாறியிருந்தார். பாலிவுட்டில் தற்போது படத்தில் கமிட்டாகியுள்ளார் சமந்தா. இந்நிலையில் தற்போது மயோசைட்டிஸ் என்ற தசை அழற்சி நோய்க்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் சமந்தா.

நாக சைத்தன்யா பிறந்தநாள்

நாக சைத்தன்யா பிறந்தநாள்

முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு இந்த நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமந்தாவை நாக சைத்தன்யா நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் சமந்தாவை மருத்துவமனையில் சென்று பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் நாக சைத்தன்யா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நாக சைத்தன்யாவின் முதல் மனைவி

நாக சைத்தன்யாவின் முதல் மனைவி

இதனிடையே முன்னதாக சமந்தா தன்னுடைய பேட்டியொன்றில், நாக சைத்தன்யாவின் முதல் மனைவி குறித்து பேசிய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் லக்ஷமி மஞ்சுவின் கேள்விக்கு பதிலளித்து பேசிய சமந்தா, தன்னுடைய படுக்கையறையில் நாக சைத்தன்யாவின் முதல் மனைவி தலையணை என்று குறிப்பிட்டிருந்தார். தான் அவரை கிஸ் செய்வதென்றாலும் தங்களுக்கு இடையில் தலையணை இருக்கும் என்றும் சமந்தா தெரிவித்திருந்தார்.

சிறப்பான புரிதல்

சிறப்பான புரிதல்

மேலும் அமெரிக்காவில் தான் நாகசைத்தன்யாவுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தபோது தன்னுடைய அம்மாவிற்கு போன் பேசக்கூட தன்னுடைய மொபைலில் காசில்லாதபோது, சைத்தன்யாவின் போனை எடுத்து தான் பேசியதாகவும், அந்த நிலையில் இருந்து தற்போதைய நிலை வரை தன்னை நாகசைத்தன்யா நன்றாக அறிவார் என்றும், மற்றவர்கள் எல்லாம் தன்னை பாதியளவே அறிந்துள்ளதாகவும் சமந்தா அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பிரிவை ஏற்காத ரசிகர்கள்

பிரிவை ஏற்காத ரசிகர்கள்

மேலும் நாக சைத்தன்யா சிறப்பான ஹஸ்பண்ட் மெட்டீரியல் என்றும் சமந்தா அந்த பேட்டியில் கூறியிருந்தார். முன்னதாக நாகசைத்தன்யாவும் தன்னுடைய பேட்டியொன்றில் சமந்தாவுடன் தான் இணைந்து நடிக்க விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த அளவிற்கு புரிதலுடன் இருந்த சமந்தா மற்றும் நாக சைத்தன்யா உறவு முறிந்ததை அவர்களது ரசிகர்கள் தற்போதுவரை ஏற்க முடியாமல் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X