எருமை மாடு மேய்க்கும் சமந்தா... வைரலாகும் லேட்டஸ்ட் படங்கள்!

By Vignesh Selvaraj

சென்னை : தமிழில் விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் 'SK12' ஆகிய படங்களில் நடித்து வரும் சமந்தா தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

தெலுங்கு தேசத்தின் மருமகளாகிவிட்ட சமந்தா, தமிழை விட தெலுங்கில் சிறந்த கதாபாத்திரங்களில், வெற்றிப் படங்களில் நடித்து அங்கு முன்னணியில் இருக்கிறார்.

நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருக்கிறார் சமந்தா. திருமணம் முடிந்த சில நாட்களிலிருந்தே தொடர்ச்சியாக ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார் சமந்தா.

புதுப்பட வாய்ப்புகள்

புதுப்பட வாய்ப்புகள்

அவரைத் தேடி இப்போதும் புதுப் பட வாய்ப்புகள் போய்க் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். தற்போது தமிழில் நான்கைந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, தெலுங்கில் ராம்சரண் தேஜாவுடன் 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்து வருகிறார்.

கிராமத்து பெண்ணாக சமந்தா

கிராமத்து பெண்ணாக சமந்தா

1985-ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் 'ரங்கஸ்தலம்' படத்தின் கதையில் சமந்தா கிராமத்துப் பெண்ணாக நடித்து வருகிறார். இப்படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடையே பரபரப்பை உருவாக்கியிருக்கின்றன.

எருமை மாடு மேய்க்கும் சமந்தா

எருமை மாடு மேய்க்கும் சமந்தா

கிளாமர் இல்லாமல் கருப்பான மேக்கப்புடன், பாவாடை தாவணியில் உள்ள சமந்தாவின் தோற்றமும், அந்தப் புகைப்படங்களும் மிகவும் இயல்பாக அமைந்துள்ளன. பூச்சி மருந்தடிக்கும் மெஷினிக்கு டீசல் ஊற்றும் புகைப்படம், எருமை மாடு மேய்க்கும் புகைப்படம் ஆகியவையும் வெளியாகி உள்ளன.

ரங்கஸ்தலம் ரிலீஸ்

தெலுங்குத் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் 'ரங்கஸ்தலம்' படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது.

தாவணியில் சமந்தா

சமந்தா தமிழில் நடித்துவரும் இரண்டு படங்களில் தாவணியில் நடிக்கிறார். தெலுங்கிலும் பாவாடை தாவணியில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் எல்லாப் படங்களிலும் தாவணி அணிந்து நடித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X