மேலாடை போட மறந்துட்டிங்களேன்னு தானே கலாய்ப்பீங்க: சமந்தா வேற லெவல்
Recommended Video
சென்னை: சமந்தா தனது புதிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
படங்களில் தொடர்ந்து பிசியாக இருக்கும் சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் சேர்ந்து ஓய்வு எடுக்க ஸ்பெயின் சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சட்டை போட மறந்துவிட்டீர்கள் சமந்தா என்று கலாய்த்துள்ளனர்.

வெளிநாட்டில் அவர் அணிந்த உடையை பார்த்து யாரும் அதிர்ச்சி அடையப் போவது இல்லை. ஆனால் நெட்டிசன்கள் தன்னை வறுத்தெடுப்பார்கள் என்று தெரிந்தும் துணிச்சலாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சமந்தா.
என் வாழ்க்கையை எனக்கு பிடித்தது போன்று தான் வாழ்வேன். அடுத்தவர்களுக்காக நிஜத்திலும் நடிக்க முடியாது என்ற கொள்கையுடன் உள்ளவர் சமந்தா. மேலும் விடுமுறையில் இருப்பதால் டயட்டை மறந்து செம கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.

பீட்சா, ஐஸ்கிரீம் என்று பிடித்ததை எல்லாம் சாப்பிடுகிறார். நாடு திரும்பியதும் ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க்அவுட் செய்வார். உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுபவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











