»   »  மீண்டும் ராஜமௌலி படத்தில் சமந்தா.. யாருக்கு ஜோடி?

மீண்டும் ராஜமௌலி படத்தில் சமந்தா.. யாருக்கு ஜோடி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சமந்தா அடுத்து யாருக்கு ஜோடி?- வீடியோ

ஐதராபாத் : நடிகை சமந்தா திருமணத்திற்குப் பிறகு நிறைய படங்களில் நடித்து வருகிறார். இந்த மாத இறுதியில், அவர் தமிழில் நடித்திருக்கும் 'இரும்புத்திரை' திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. தெலுங்கில் நடித்துள்ள 'ரங்கஸ்தலம்', 'மகாநதி' படங்களும் அதே சமயத்தில் ரிலீஸ் ஆகின்றன.

'பாகுபலி', 'பாகுபலி 2' என்ற இரண்டு மெகா படங்களை கொடுத்து இந்திய அளவில் பிரபல இயக்குனராகி விட்டார் ராஜமௌலி. அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

samantha's next film with rajamouli

'பாகுபலி 2' படத்திற்கு பிறகு, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ராஜமௌலி. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதால் தற்போது பிரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன.

இந்தப்படத்தில், ராக்ஷி கண்ணா ஒரு ஹீரோயினாக நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், சமந்தாவும் இன்னொரு நாயகியாக நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராம்சரணுடன் 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்திருக்கும் சமந்தா மீண்டும் அவருக்கு ஜோடியாகிறாரா இல்லை, ஜூனியர் என்டிஆர் ஜோடியாகிறாரா என்பது விரைவில் தெரியும்.

இதற்கு முன்பு ராஜமௌலி இயக்கிய 'நான் ஈ' படத்தில் நாயகியாக நடித்துள்ளார் சமந்தா. அந்தப் படத்திற்கு பிறகு தான் தெலுங்கில் சமந்தாவின் மார்க்கெட் உயர்ந்தது. இதனால், ராஜமௌலி படத்தில் நிச்சயம் சமந்தா நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

English summary
Actress Samantha has acted in many films after marriage. After 'Baahubali 2', Rajamouli is directing a new movie starring Junior NTR and Ramcharan. Samantha is also reported to be the heroine in this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X