Shaakuntalam Review - சமந்தாவின் சாகுந்தலம் படம் எப்படி இருக்கு? - இதோ விமர்சனம்
சென்னை: Shaakuntalam Review (சாகுந்தலம் விமர்சனம்) சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் சாகுந்தலம் படத்திற்கான விமர்சனங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அனுஷ்கா நடிப்பில் உருவான ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்ட பிறகு சமந்தா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. இன்று வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு அவரது கேரியர் உச்சம் சென்றது. புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம், ஹாலிவுட் படத்தில் கமிட்டானது என பரபரப்பாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த சமயத்தில்தான் அவருக்கு மையோசிடிஸ் எனும் தோல் நோய் வந்தது. இதற்காக பல மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் சமீபத்தில் சிகிச்சை முடிந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

சாகுந்தலம் திரைப்படத்தில் சமந்தா: அந்த வகையில் சமந்தா நடித்திருக்கும் படம் சாகுந்தலம். ருத்ரமாதேவி படத்தின் இயக்குநர் குணசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் சமந்தா லீட் ரோலில் நடித்திருக்கிறார். அவருடன், தேவ் மோகன், மோகன் பாபு, அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
மணி ஷர்மா இசையமைப்பில் சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்தத் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது., படத்துக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனத்தை கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்: சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் நன்றாக இருக்கிறது. ஆனாலும் படத்தின் நீளத்தை கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம் என்று இந்த ரசிகர் ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். சாகுந்தலம் படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 22 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாகுந்தலம் வேற லெவல்: சாகுந்தலம் படம் அருமையாக இருக்கிறது. சுகுமாரின் இயக்கம் மிக சிறப்பாக இருக்கிறது. சமந்தாவின் நடிப்பு அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. அவரது ஸ்க்ரீன் ப்ரெஸன்ஸ் அட்டகாசம். சந்தேகமே வேண்டாம் 2023ஆம் ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் சாகுந்தலம்தான் என ஏகத்துக்கும் புகழ்ந்து படத்துக்கு ஐந்து மதிப்பெண்களுக்கு நான்கு மதிப்பெண்களை வழங்கியிருக்கிறார் இந்த ரசிகர்.

சீரியல்களே பரவாயில்லை: சாகுந்தலம் படத்தை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் மிகப்பெரிய பேரழிவு. ஈடிவியின் சீரியல்களே சாகுந்தலம் படத்துடன் ஒப்பிடும்போது மிகச்சிறப்பாக இருக்கும் என கூறி தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக சீரியல்களே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கா படம் மோசமாக இருக்கிறது என்ற எண்ணத்தை அவர் விதைத்திருக்கிறார்.

மிகப்பெரிய பேரழிவு சாகுந்தலம்: மோசமான கிராஃபிக்ஸ் காட்சிகள். மற்றும் சலிப்பூட்டக்கூடிய புராண காலத்து கதை. நல்ல இசை மற்றும் சில ஓகேயான காட்சிகளை தவிர்த்து படத்தை பற்றி பாசிட்டிவாக பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. போர்க் காட்சிகள் நகைச்சுவை போல் இருக்கிறது. அதற்கான விஷுவல்களும் கார்ட்டூன் காட்சிகள் போல் இருக்கின்றன. பேரழிவு என இந்த ரசிகர் கொந்தளித்து தீர்த்திருக்கிறார். அதேபோல், காமெடி பீஸ் அட்ரெஸ் சாகுந்தலம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சமந்தா என இன்னோரு ரசிகரும் தனது ஏமாற்றத்தை பதிவு செய்திருக்கிறார்.


......


Click it and Unblock the Notifications











