Samantha's Shaakuntalam- சமந்தா படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா?.. ரசிகர்கள் அதிர்ச்சி
ஹைதராபாத்: Samantha's Shaakuntalam (சமந்தாவின் சாகுந்தலம்) நடிகை சமந்தா நடித்திருக்கும் சாகுந்தலம் படத்தின் திரையரங்க வியாபாரம் இன்னும் முடியவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர். மாஸ்கோவின் காவிரி மூலம் அறிமுகமான அவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். அதேபோல் ஹிந்தியில் உருவான தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாவது பாகத்திலும் நடித்து தனது முத்திரையை பதித்தார்.

நாக சைதன்யாவுடன் நடந்த திருமணம்: தமிழில் மாஸ்கோவின் காவிரி படம் மூலம் அறிமுகமான சமந்தா அதன் பிறகு விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து தெலுங்குக்கு சென்ற அவர் அங்கும் சிறப்பாக நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். விண்ணைத்தாண்டி வருவாயா ரீமேக்கில் நடிக்கும்போது நாக சைதன்யாவை காதலித்தார். இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் கோவாவில் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா: திருமணத்திற்கு பிறகும் சமந்தா நடிப்பில் கவனம் செலுத்திவந்தார். நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே திருமணம் வாழ்க்கையும் நன்றாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் சில வருடங்களுக்கு முன் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களின் மூலமாக அறிவித்தனர். ஆனால் எதற்காக பிரிந்தார்கள் என்பதை இருவருமே அறிவிக்கவில்லை.
சமந்தாவுக்கு வந்த நோய்: திருமண பந்தம் முடிவுக்கு வந்த பிறகு சமந்தாவால் திரையுலகில் நிலைக்க முடியாது என பலர் ஆரூடம் கூறினர். அதையெல்லாம் உடைத்து சமந்தா பல படங்களில் கமிட்டானார். புஷ்பா படத்தில் அவர் ஆடிய நடனம் அனைவரையும் ரசிக்க வைத்தது. அதுமட்டுமின்றி ஹாலிவுட் படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார்.
சூழல் இப்படி இருக்க அவருக்கு மையோசிடிஸ் எனும் தோல் நோய் வந்தது. அந்த நோய்க்காக பல மாதங்கள் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் அந்த நோயிலிருந்து மீண்டு சினிமாவில் நடிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கும் சாகுந்தலம்: அந்தவகையில் அவர் சாகுந்தலம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். மகாபாரதத்தில் இடம்பெற்ற சகுந்தலா மற்றும் ராஜா துஷ்யந்த் இருவரும் காதல் கதையை மையமாக கொண்டு இப்படம் தயாராகி இருக்கிறது. அனுஷ்கா நடித்த ருத்ரம்மாதேவி படத்தை இயக்கிய குணசேகரன் இயக்கியிருக்கிறார்.

3டியில் உருவாகியிருக்கும் படம் சிக்கலில் இருக்கிறது: ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் 3Dயில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் சாகுந்தலம் படம் குறித்த தகவல் ஒன்று பரபரத்துக்கொண்டிருக்கிறது. அதாவது, அடுத்த வாரம் படம் ரிலீஸ் ஆகவிருக்கும் சூழலில் படத்துக்கான திரையரங்க வியாபாரம் இன்னும் முடிவடையவில்லையாம்.
விநியோகஸ்தர்களுக்கு எவ்வளவு குறைந்த விலை கூறினாலும் படத்தை வாங்குவதற்கு மறுத்துவருகிறார்களாம். முன்னணி நடிகையான சமந்தாவின் இர்னடாவது இன்னிங்ஸ் இவ்வளவு சிக்கலுக்குள் சிக்கியிருக்கிறதே என சமந்தாவின் ரசிகர்கள் சோகத்துடன் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











