சமந்தாவின் சாகுந்தலம் புதிய ரிலீஸ் தேதி இதுதான்... ஒரேடியாக ஒத்திவைக்கப்பட்டது ஏன்..?

ஹைதரபாத்: சமந்தா நடிப்பில் கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியான யசோதா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இதனைத்தொடர்ந்து சமந்தாவின் சாகுந்தலம் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

குணசேகர் இயக்கத்தில் தில் ராஜூ தயாரித்துள்ள இந்தப் படம் கடந்தாண்டு நவம்பர் மாதமே வெளியாக வேண்டியது.

இந்நிலையில், மூன்றாவது முறையாக சாகுந்தலம் ரிலீஸை ஒத்திவைத்து புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.

 சமந்தாவின் சாகுந்தலம்

சமந்தாவின் சாகுந்தலம்

கடந்த சில மாதங்களாகவே சமந்தாவின் உடல்நிலை குறித்த செய்திகள் அதிகளவில் வெளியாகி வந்தன. மயோசிடிஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சமந்தா அதற்காக வெளிநாடுகளில் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதனிடையே சமந்தா நடித்திருந்த யசோதா திரைப்படம் நவம்பர் 11ம் தேதி வெளியானது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 33 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது. அதே நவம்பர் மாதம் சமந்தா நடித்த மற்றொரு படமான சாகுந்தலமும் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

 மூன்றாவது முறையாக ரிலீஸ் தேதி மாற்றம்

மூன்றாவது முறையாக ரிலீஸ் தேதி மாற்றம்

ஆனால், சாகுந்தலம் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாமல் இருந்ததால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. அதன்பின்னர் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இருந்து அடுத்தடுத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றன. ஹிஸ்டாரிக்கல் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில், இம்மாதம் ரிலீஸாகவிருந்த சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் சாகுந்தலம்

ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் சாகுந்தலம்

விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தான் சமந்தாவின் சாகுந்தலம் படத்தையும் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் காட்சிகள் முழுவதையும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்றி வருகிறாராம் இயக்குநர் குணசேகர். அதனால் தான் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாக சொல்லப்படுகிறது. பான் இந்தியா படமாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் சாகுந்தலம் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 விரைவில் குஷி ஷூட்டிங்

விரைவில் குஷி ஷூட்டிங்

சாகுந்தலம் படத்தின் புதிய ரிலீஸ் தேதியால் சமந்தாவின் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கடந்த சில மாதங்களாக மயோசிடிஸ் தசை அழற்சி எனப்படும் மயோசிடிஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சமந்தா, தற்போது ஜிம்மில் செம்ம எனர்ஜிட்டிக்காக ஒர்க்அவுட் செய்து வருகிறார். இதனால் விரைவில் அவர் குஷி படத்தின் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அமேசான் ப்ரைம் நிறுவனம். தி பேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குநர்கள் டிகே & ராஜ் கூட்டணியில் மீண்டும் சமந்தா நடிக்கும் சிட்டாடல் என்ற வெப் சீரிஸ்ஸின் ஷூட்டிங்கையும் தொடங்கியுள்ளது. இந்த வெப் சீரிஸ் சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X