Samantha: சமந்தாவுக்கு ஷாக்கிங் கொடுத்த பிரபல ஓடிடி நிறுவனம்... சாகுந்தலம் படம் தான் காரணமா?
சென்னை: சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் கடந்த மாதம் 14ம் தேதி வெளியானது.
80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனால் சாகுந்தலம் திரைப்படம் நேற்று முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆனது.
அதேநேரம் சகுந்தலம் படத்தால் சமந்தாவிற்கு செம்ம ஷாக்கிங் சம்பவம் ஒன்று நடந்துள்ளதாம்.

சமந்தாவுக்கு ஷாக்கிங் சம்பவம்:சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் கடந்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குணசேகரன் இயக்கிய இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவானது. பான் இந்தியா படமாக உருவான சாகுந்தலத்துக்கு முதலில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெளியான பின்னர் நெகட்டிவான விமர்சனங்களுடன் தோல்வியை சந்தித்தது.
இதனால் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான சாகுந்தலம், 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்த யசோதா திரைப்படம் வசூலில் லாபம் கொடுத்தது. ஆனால், சாகுந்தலம் படத்தின் தோல்வியால் அவர் மீது அதிக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அவரது திரை வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டதைப் போல சிலர் கூறி வந்தனர்.
இந்நிலையில், சாகுந்தலம் திரைப்படம் நேற்று முதல் அமேசான் ப்ரைமில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. தியேட்டரில் ரிலீஸான சாகுந்தலம் ஒரேமாதத்தில் ஓடிடியில் வெளியானதால் சமந்தாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேநேரம் இப்போதெல்லாம் முன்னணி ஹீரோக்களின் படங்களே ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாவதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்தனர்.
ஆனால், அமேசானில் வெளியான சாகுந்தலம் படத்திற்கு ஓடிடி ரசிகர்களிடமும் வரவேற்பு இல்லையாம். நேற்று முதல் ஸ்ட்ரீம் ஆகிவரும் சாகுந்தலம் படத்திற்கு சரியான ரீச் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு தயாரிப்பாளரும் அமேசான் தரப்பிலும் சரியான ப்ரோமோஷன் செய்யாததே காரணம் என சொல்லப்படுகிறது. சாகுந்தலம் படம் தியேட்டரிலேயே தோல்வியடைந்துவிட்டதால் தான் ப்ரோமோஷன் செய்யவில்லையாம்.

சமந்தாவிற்காகவே சாகுந்தலம் படத்தை தயாரித்த தில் ராஜூவும், அவரது வெப் சீரிஸ்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் அமேசான் ப்ரைம் தளமும் இப்போது அவரை புறக்கணித்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுகுறித்து சமந்தா தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்துகளும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சாகுந்தலம் படத்தின் தோல்வி குறித்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சிட்டி பாபு சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தயாரிப்பாளர் சிட்டி பாபுவுக்கு நடிகை சமந்தாவும் அதிரடியாக பதிலடி கொடுத்திருந்தார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஸ்டேட்டஸ் வைத்திருந்த சமந்தா, "காது மடல்களில் எதற்காக ஒருவருக்கு அதிக முடி வளர்கிறது என கூகுளில் தேடினேன். அதற்கு அதிகமான ஹார்மோன் சுரப்பது தான் காரணம் என தெரியவந்தது. இது யார் என்பது உங்களுக்கு தெரியும்" என தயாரிப்பாளர் சிட்டி பாபுவை மறைமுகமாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications