Shaakuntalam : கேன்ஸ் படவிழாவில் விருதை பெற்ற சாகுந்தலம்.. அந்த மொக்கப்படத்திற்கு விருதா?

சென்னை : கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் படத்திற்கு விருது கிடைத்துள்ளது.

புராணக்கதையான சாகுந்தலம் கதையைக்கொண்டு தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் சாகுந்தலம்.

இந்த காவியத்தில் வரும் சாகுந்தலை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவும், துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்திருந்தனர்.

Samanthas shaakuntalam won award in cannes film festival 2023

நடிகை சமந்தா : அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் ம்ம்ம் சொல்லி ஆட்டம் போட்ட சமந்தாவின் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் சென்றது. அதன்பின் இவர் நடித்த யாசோதா திரைப்படத்திற்கும் கணிசமான வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து வெற்றியில் திளைத்த சமந்தா இயக்குனர் குணசேகரன் இயக்கத்தில் உருவான சாகுந்தலம் படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நெகடிவ் விமர்சனம் : இதில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் புத்தாண்டு அன்று வெளியான இத்திரைப்படம் படுமோசமான விமர்சனத்தை பெற்றது.

Samanthas shaakuntalam won award in cannes film festival 2023

20 கோடி நஷ்டம் : 80 கோடி பட்ஜெட்டில் உருவான சாகுந்தலம் படம் 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளது. இதனால், படத்தின் தயாரிப்பாளர் மட்டுமல்ல திரையரங்கு விநியோகஸ்தர்களும் சாகுந்தலம் திரைப்படத்தின் மோசமான தோல்வியால் தலையில் துண்டு போட்டுள்ளார். இவர்கள் மட்டுமில்லாமல் சமந்தாவும் தற்போது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

Samanthas shaakuntalam won award in cannes film festival 2023

விருது : இந்நிலையில், படுமோசமான படம் என்று பெயர் எடுத்த, சாகுந்தலம் படத்திற்கு உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது கிடைத்துள்ளது. இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய நீதா லுல்லாவிற்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது. இப்படத்திற்கு வந்த மோசமான வந்த விமர்சனத்தால் கவலை அடைந்த ரசிகர்களுக்கு இந்த விருது சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X