அழகு அள்ளும் சமந்தா... வெளியானது சகுந்தலம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்!
சென்னை : நடிகை சமந்தாவின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன.
சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சகுந்தலம் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகை சமந்தா. பல வெற்றிப் படங்களை தொடர்ந்து கொடுத்துவரும் இவரது நடிப்பில் தற்போது விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

நெகட்டிவ் விளம்பரம்
சமீபத்தில் சமந்தா அறிவித்துள்ள அவரது விவாகரத்து, புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடல் உள்ளிட்டவை அவருக்கு மிகப்பெரிய விளம்பரத்தை கொடுத்துள்ளது. நெகட்டிவ்வாக இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளார் சமந்தா. இதனால் இவரது அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து வருகின்றனர்.

சகுந்தலம் படம்
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் உருவாகிவரும் சகுந்தலம் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தப் படத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்
விரைவில் ரிலீசாக உள்ள சகுந்தலம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் பறவைகள் மற்றும் மான்கள் சூழ காட்டில் அமர்ந்துள்ளார் சமந்தா. சகுந்தலாவின் தோற்றத்தில் இவர் மிகவும் அழகாக காணப்படுகிறார். எதையோ விருப்பத்துடன் பார்க்கிறார். இந்தப் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது.

குணசேகர் இயக்கம்
குணசேகர் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.பிரபல நடிகர் அல்லு அர்ஜீன் மகள் அல்லு அர்ஹா இந்தப் படத்தில் அறிமுகமாகவுள்ளார். மேலும் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
Recommended Video

பிரம்மாண்ட தயாரிப்பு
நீலிமா குணா, இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு, இந்தப் படத்தை வழங்கவுள்ளார். இந்தப் படத்திற்காக இயக்குநர் குணசேகர், தனிப்பட்ட முறையில் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











