என்னாச்சு? அந்த சர்ச்சைதான் காரணமா? நடிகை சமந்தா நடித்த வெப்சீரிஸ் ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு!

By

சென்னை: சமந்தா நடித்துள்ள வெப் சீரிஸின் வெளியீடு திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ் உட்பட பலர் நடித்து வெளியான வெப் தொடர், தி ஃபேமிலி மேன்.

அமேசான் பிரைமில் வெளியான இந்த தொடர், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இரண்டாவது சீசன்

இரண்டாவது சீசன்

இந்தி பட இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இந்தத் தொடரை இயக்கி இருந்தனர். இப்போது இதன் இரண்டாவது சீசன் தயாராகி உள்ளது. இதில் சமந்தா நடித்துள்ளார். இந்த தொடர் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. பின்னர் பிப்ரவரி மாதத்துக்கு இதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

விதிகள் உடைப்பு

விதிகள் உடைப்பு

இந்த தொடரில் நடித்தது பற்றி பேசிய நடிகை சமந்தா, 'இதில் நான் பல விதிகளை உடைத்திருக்கிறேன். புத்தம் புதிதாகப் பல விஷயங்களைப் சோதித்துப் பார்த்திருக்கிறேன். என்னை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இந்த கேரக்டர் ஆச்சரியமானதாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

நெகட்டிவ் கேரக்டர்

நெகட்டிவ் கேரக்டர்

இதற்கிடையே இந்த தொடரில் அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதில் அவருக்கு அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இதை படத்தின் இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர். சமந்தா சண்டைக் காட்சிகளில் மிரட்டினார் என்றும் அதற்காக அவர் அதிகப் பயிற்சி மேற்கொண்டார் என்றும் கூறினர்.

மறுபேச்சு பேசவில்லை

மறுபேச்சு பேசவில்லை

இதுபற்றி இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே கூறும்போது, இந்தப் படத்துக்காக சமந்தாவிடம் பேசினோம். இதில் கிளாமர் காட்சிகள் இல்லை. ஆனால், அதிகமான ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கிறது என முதலில் சொன்னோம். அவர் மறுபேச்சு பேசவில்லை. நடிக்கிறேன் என்றார். அதைதான் எதிர்பார்த்தோம் என்றனர்.

மன்னிப்பு கோருகிறேன்

மன்னிப்பு கோருகிறேன்

இந்நிலையில், இந்த தொடரின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமேசானில் வெளியான 'தாண்டவ்' வெப் சீரிஸில் இந்து தெய்வங்களை அவதூறாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. அதன் தயாரிப்பாளர் அலி அப்பாஸ் யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியிருந்தார். இருந்தும் வழக்குகள் தொடரப்பட்டன.

மிர்ஸாபூர் சிக்கல்

மிர்ஸாபூர் சிக்கல்

இதில் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா உட்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இதே போல அமேசானில் வெளியான மிர்ஸாபூர் என்ற சீரிஸும் சிக்கலை சந்தித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள மிர்ஸாபூர் நகரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த வெப் சீரிஸில் அந்த நகரின் இமேஜை கெடுக்கும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டது.

தள்ளி வைப்பு

தள்ளி வைப்பு

இதன் காரணங்களால், சமந்தா நடித்துள்ள 'ஃபேமிலிமேன் 2' வெப் சீரிஸின் வெளியீடு காலவரையறை இன்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அமேசான் பிரைம் சார்பில் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X