சமந்தாவோட அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ்... யசோதா படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிச்சாச்சே!

ஐதராபாத் : நடிகை சமந்தாவின் நடிப்பில் உருவாகிவரும் படம் யசோதா. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீசாகவுள்ளது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சமந்தாவிற்கு ஆக்ஷன் காட்சிகளும் இருக்காம். அழகான ராட்சசியாகவே ரசிகர்களுக்கு அறிமுகமான சமந்தா தற்போது ஆக்ஷன் அவதாரமும் எடுத்துள்ளது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

இந்திய அளவில் சிறப்பான நடிகை

இந்திய அளவில் சிறப்பான நடிகை

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது பாலிவுட்டிலும் சிறப்பான நாயகியாக அறிமுகமாகியுள்ளார் சமந்தா. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஆட்டம் போட்ட இவர் பேமிலி மேன் 2 தொடரில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் சிறப்பான நாயகியாக மாறியுள்ளார். இந்தியிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

சமந்தாவின் நடிப்பில் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இவருடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

ஆக்ஷன் த்ரில்லர் படம்

ஆக்ஷன் த்ரில்லர் படம்

இந்நிலையில் ஸ்ரீதேவி மூவீஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் சமந்தா நடிக்கும் யசோதா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிவரும் இந்தப் படத்தை ஹரி -ஹரீஷ் இயக்கியுள்ளனர். இந்தப் படத்தில் முதன்மை கேரக்டரில் நடித்துள்ள சமந்தாவிற்கு சண்டைக் காட்சிகளும் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

5 மொழிகளில் வெளியீடு

5 மொழிகளில் வெளியீடு

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இந்தப் படம் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளதாக தயாரிப்பாளர் சிவலெங்கா கூறியுள்ளார். மே மாத இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொடைக்கானலில் சூட்டிங்

கொடைக்கானலில் சூட்டிங்

பிரம்மாண்டமான செட்டில் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு தற்போது அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக கொடைக்கானலுக்கு சென்றுள்ளது. படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் சமேஷ், முரளி சர்மா உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் மணி ஷர்மா.

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்

யசோதா படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப் படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென் இணைந்துள்ளதாக சமீபத்தில் நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவருடன் தான் இணைந்திருக்கும் புகைப்படத்துடன் தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தில் அவருக்கு ஸ்டண்ட் காட்சிகள் இருப்பது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக இருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X