Samantha: சாகுந்தலம் படத்தின் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கல்... அப்செட்டான சமந்தா!

சென்னை: சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாகவுள்ளது.

தெலுங்கில் உருவாகியுள்ள சாகுந்தலம் பான் இந்தியா படமாக 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது.

80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் சாகுந்தலம் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 Samantha: Samantha starrer Shaakuntalam film is in trouble again

மீண்டும் சிக்கலில் சாகுந்தலம்
சமாந்தாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது. குணசேகரன் இயக்கியுள்ள சாகுந்தலம் தெலுங்கில் உருவாகி இருந்தாலும், பான் இந்தியா படமாக 5 மொழிகளில் ரிலீஸாகிறது. 80 கோடி பட்ஜெட்டில் 3D-யில் சாகுந்தலம் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ருத்ரமாதேவிக்குப் பிறகு குணசேகரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் முதலில் அனுஷ்கா தான் நடிக்கவிருந்தார். ஆனால், பின்னர் அவருக்குப் பதிலாக சமந்தா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியாகவிருந்த இப்படம் 2023 பிப்ரவரிக்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த படக்குழு, ஏப்ரல் 14ம் தேதியை கன்ஃபார்ம் செய்துள்ளது.

மயோசிடிஸ் பாதிப்பின் நடுவே இந்தப் படத்தில் நடித்த சமந்தா, ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். காளிதாசன் எழுதிய சகுந்தலையின் காதல் கதையை அடிப்படையாக வைத்து சாகுந்தலம் படம் உருவாகியுள்ளது. சமந்தா ஜோடியாக மன்னன் துஷ்யந்தன் கேரக்டரில் தேவ் மோகன் நடித்துள்ளார். மேலும், அதிதி பாலன், கௌதமி, பிரகாஷ்ராஜ், மதுபாலா உட்பட பலர் நடித்துள்ளனர். அதேபோல் அல்லு அர்ஜூனின் மகள் அல்லு ஆர்காவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

 Samantha: Samantha starrer Shaakuntalam film is in trouble again

இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் தியேட்டர் பிஸினஸ் இன்னும் முடியவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், தியேட்டர் ரைட்ஸை குறைந்த விலையில் கொடுக்கலாம் என படக்குழு முடிவுசெய்துள்ளதாம். ஆனாலும் விநியோகஸ்தர்கள் சாகுந்தலம் படத்தை வெளியிட தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் இதேநிலையே நீடிப்பதாக சொல்லப்படுகிறது.

ரூ. 80 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தின் தியேட்டர் விநியோகம் டல்லடித்து வருவதால், போட்ட பணத்தை எடுக்க முடியுமா என தயாரிப்பாளர் குழப்பத்தில் உள்ளாராம். பாக்ஸ் ஆபிஸில் மிஸ்ஸானால், அடுத்து ஓடிடி, சாட்டிலைட் ரைட்ஸ் மட்டுமே கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தாவின் யசோதா திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், சாகுந்தலம் நிலை மோசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X