Samantha: நோ சொன்ன சாய் பல்லவி.. மீண்டும் வாரிசு நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா.. பரபரக்கும் டோலிவுட்

சென்னை: மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த சமந்தா, சில மாதங்கள் ஓய்வெடுக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. கடைசியாக அவரது நடிப்பில் குஷி திரைப்படம் வெளியானது. அதன்பின்னர் சமந்தா படங்களில் கமிட் ஆகாத நிலையில், அவருக்கு வாரிசு நடிகரிடம் இருந்து அழைப்புச் சென்றுள்ளதாம்.

மீண்டும் வாரிசு நடிகருடன் சமந்தா: டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் ஹீரோவாக நடித்து வருகிறார். மெகா பவர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ராம் சரண், தற்போது கேம் சேஞ்சர் படத்தில் நடிக்கிறார். ஷங்கர் இயக்கும் இந்தப் படம் இந்தாண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. முன்னதாக ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

 Samantha: Samantha will be acts with Ram Charan in RC 16

இதனால் ராம் சரணின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனது 16வது படத்தில் நடிக்கவுள்ளார் ராம் சரண். புச்சி பாபு சனா இயக்கும் RC 16 ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். இதன் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடி தெலுங்குப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் ஏஆர் ரஹ்மான். கடைசியாக 2010ம் ஆண்டு வெளியான கொமரம் புலி என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார்.

RC 16 படத்தில் ராம் சரண் ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. ஆனால், தற்போது சாய் பல்லவியும் நோ சொல்லிவிட்டதால் அவருக்குப் பதில் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதாம். ஏற்கனவே ரங்கஸ்தலம் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா.

 Samantha: Samantha will be acts with Ram Charan in RC 16

சுகுமார் இயக்கிய ரங்கஸ்தலம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதேபோல் ராம் சரண், சமந்தா இருவரது கெமிஸ்ட்ரியும் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்திருந்தது. இந்நிலையில் RC 16 படத்தில் மீண்டும் ராம் சரணுடன் சமந்தா ஜோடி சேருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். நாக சைதன்யாவை பிரிந்த பின்னர் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி நடித்து வருகிறார் சமந்தா. அதேபோல் இன்னொரு பக்கம் வெப் சீரிஸ்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

இந்நிலையில், RC 16 படத்தில் ராம் சரண் ஜோடியாக சமந்தா நடிக்கலாம் என்ற தகவல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X