சாகுந்தலம் புதிய ரிலீஸ் தேதி.. அடுத்தடுத்து தள்ளிவைக்க காரணம் என்ன.. வெளியான தகவல்!
சென்னை : சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பலமுறை தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளிவைக்கப்பட்டதால், ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
காவியத்தில் வரும் சாகுந்தலை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் இப்படத்தில் நடித்துள்ளார்.
இதில், அதிதி பாலன், பிரகாஷ்ராஜ்,மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் லீட்ரோலில நடித்துள்ளனர்.

சமந்தாவின் யசோதா
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் நடிப்பில் அண்மையில் வெளியானத் திரைப்படம் யாசோதா. இந்த படத்தில் சமந்தா வாடகைத் தாயாக நடித்திருந்தார். வாடகைத் தாய் முறை மூலம் நடக்கும் முறைகேடுகளை கண்டுபிடிக்கும் பெண்ணாக சமந்தா அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

காவியக் காதல்
இதையடுத்து, நடிகை சமந்தா நடித்துள்ள காவியக் காதல் திரைப்படமான சாகுந்தலம் படத்தில் சாகுந்தலையாக நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகுற வைத்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படமாக 3டியில் உருவாக்கப்பட்டுள்ளது.

படம் தள்ளிவைப்பு
அனுஷ்கா ரெட்டி நடித்த ருத்ரமா தேவி படத்தை இயக்கிய இயக்குனர் குணசேகரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிந்த நிலையில் படம் நம்பவர் மாதமே வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதையடுத்து, சாகுந்தலம் படம் பிப்ரவரி 17ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.

புதிய ரிலீஸ் தேதி
இதையடுத்து, சாகுந்தலம் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த வகையில் ஏப்ரல் 14ந் தேதி அதாவது தமிழ் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தள்ளிவைக்கப்படுவதால், ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இதுதான் காரணம்
சாகுந்தலம் படத்தின் ஒட்டுமொத்த காட்சியையும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்ற உள்ளதால் கிராபிக்ஸ் பணி முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் சாகுந்தலம் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.இடையில் இன்னும் இரண்டு மாதம் உள்ளதால்,ஏப்ரல் 14ந் தேதி திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

சிட்டாடல் வெப் சீரிஸில்
நடிகை சமந்தா துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். மேலும், சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதில் வருண் மற்றும் சமந்தா இருவரும் ஸ்டைலான உளவாளிகளாக நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் சர்வதேச அளவில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் இந்திய தொடர்களில் ஒன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications