சமந்தா மடி மீது உட்கார்ந்து செல்ஃபி எடுக்கும் குரங்கு.. எப்பவுமே செல்ஃபி புள்ள அவங்க தானே!

சென்னை: நடிகை அமலா பாலை தொடர்ந்து நடிகை சமந்தா தற்போது பாலி தீவில் ஓய்வெடுத்து வருகிறார். குஷி மற்றும் சிட்டாடல் ப்ராஜெக்ட்களில் நடித்து முடித்த சமந்தா இன்னும் ஒரு வருஷத்துக்கு என்ன யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க, நான் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு ஹெல்தியா திரும்ப கம்பேக் கொடுக்கிறேன் என கிளம்பி விட்டார்.

ஆரம்பத்தில் ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்திருந்த சமந்தா அங்கேயே தங்கி விடுவாரா என கமெண்ட்டுகள் பறக்க தற்போது தனது தோழிகளுடன் பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கே அவர் தனது மடி மீது குரங்கை உட்கார வைத்து செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.

Samantha shares a cute selfie with monkey at Bali Island

சமந்தாவை சாய்த்த கொடிய நோய்: தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த சமந்தா அடுத்த கட்டமாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த நிலையில், அங்கேயும் தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை சம்பாதித்தார் சமந்தா.

அக்‌ஷய் குமார், ஆயூஷ்மான் குரானா, வருண் தவான் என பல பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் குவிந்த நிலையில், திடீரென மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் சமந்தாவை தாக்கிய நிலையில், அத்தனை பட வாய்ப்புகளையும் அவர் மிஸ் செய்தார். லியோ படத்திலேயே சமந்தா தான் நடிக்க வேண்டியது என்றும் பேச்சுக்கள் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

பாலி தீவில் ஓய்வு: சாகுந்தலம் திரைப்படம் சமந்தாவுக்கு மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள குஷி படத்தை ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

மேலும், ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வருண் தவான் உடன் இணைந்து நடித்துள்ள சிட்டாடல் வெப்சீரிஸும் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அந்த படங்களின் படப்பிடிப்புகளை முடித்து விட்ட சமந்தா ஒரு வருஷத்துக்கு ஓய்வெடுக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பாலி தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

Samantha shares a cute selfie with monkey at Bali Island

சமந்தா மடியில் குரங்கு: பாலி தீவுக்கு நடிகை சமந்தா மூலிகை சிகிச்சை எடுக்க சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அங்கே குரங்கு ஒன்றை மடியில் வைத்துக் கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்ட செம க்யூட்டான புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை சமந்தா பார்க்கவே வொர்க் டென்ஷன் எல்லாம் இல்லாமல் சந்தோஷமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க சமந்தா என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X