Samantha: ஆத்தி.. சமந்தாவா இது.. இப்படி வந்து நிக்கிறாங்களே.. failed marriageக்கு அவங்க போட்ட போஸ்ட்
சென்னை: சர்வதேச இதழான பஜார் ஃபேஷன் இதழின் அட்டை படத்தை அலங்கரிக்க படு போல்டாக நடிகை சமந்தா கொடுத்துள்ள போஸ் இணையத்தை ஒட்டுமொத்தமாக சூடாக்கி உள்ளது.
நடிகை சமந்தாவை இன்ஸ்டாகிராமில் இந்தியளவில் 3 கோடி ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். அந்த ரசிகர்களுக்கு உங்கள் வாழ்க்கையில் இருந்து ஏதாவது சொல்ல விரும்புறீங்களா என பஜார் இந்தியா ஃபேஷன் இதழின் பேட்டியின் போது கேட்கப்பட்ட கேள்வியை பதிவிட்டு, அதற்கான பதிலும் செம சூப்பராக கொடுத்துள்ளார் சமந்தா.

ஹாலிவுட் நடிகையெல்லாம் ஓரம்போங்க: புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலிலும், தி ஃபேமிலி மேன் சீசன் 2 வெப்சீரிஸிலும் எல்லை மீறிய கவர்ச்சியை காட்டி நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிறங்கடித்த சமந்தா தற்போது ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு செம போல்டான போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களை ஒரேயடியாக சாய்த்துப்புட்டார்.
தோல்வியடைந்த திருமண வாழ்க்கை: காட்டுத்தனமான கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை சொல்லிவிட வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சமந்தா அப்படியே அதற்கு கொடுத்த கேப்ஷன் பார்த்தால் அந்த மூடையை கெடுத்து விடும் அளவுக்கு அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார்.
மோடிவேஷன்: கடந்த 2 ஆண்டுகளாக தனது வாழ்க்கையில் ஏகப்பட்ட அப்ஸ் அண்ட் டவுன்களை பார்த்து வருவதாகவும் failed marriage என சமந்தா குறிப்பிட்டுள்ளதை பார்த்து அவரது ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். ஆனாலும், தான் சோர்ந்து விடவில்லை என்றும் தன்னை போலவே சினிமாவில் உடல்நலம் குன்றி மீண்டும் வந்த நடிகர்கள் பற்றி தெரிந்த கொண்ட நிலையில், தானும் கம்பேக் கொடுத்துள்ளதாகவும் தனது ரசிகர்களுக்கும் அந்த பாடத்தை சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
ஃபயர் விட்ட நடிகை: சமந்தா கருப்பு நிற கவர்ச்சி உடையில் அப்படியொரு போஸ் கொடுத்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் ஃபயர் விட்டு வரும் நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் முதல் ஆளாக ஃபயர் விட்டு இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. தனது ரசிகர்கள் தன் மீது காட்டும் அன்பே தனக்கு மருந்தாக மாறியிருப்பதாகவும் அவர்களுக்காக தான் எப்போதும் இருப்பேன் என சமந்தா பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











