அரை டவுசரில் தோழியுடன் செம ஆட்டம் போடும் சமந்தா.. பாலி தீவில் ஒரே ஜாலி தான் போல!
சென்னை: நடிகை சமந்தா பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், தனது தோழியுடன் ஆட்டம் போடும் செம க்யூட்டான வீடியோ ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமந்தா தனது உடல் நலத்தை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டார்.
மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதியுற்று இருந்த சமந்தா ஒரு வருஷம் ஓய்வு எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தனது தோழி ஒருவருடன் பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் சமந்தா.

பாலி தீவில் ஜாலி பண்ணும் சமந்தா: நடிகை சமந்தா உடம்பு சரியில்லாமல் சிகிச்சை எடுக்கப் போயுள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், அவர் வெளியிடும் வீடியோக்களை எல்லாம் பார்த்தால் அப்படி தெரியவே இல்லை.
ஷூட்டிங் டென்ஷனில் இருந்து சற்றே ரிலாக்ஸ் செய்ய தனது தோழியுடன் ஜாலி ட்ரிப் சென்றிருப்பது போலத்தான் தெரிகிறது. தொடர்ந்து பாலி தீவில் இருந்து எடுக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்து வருகிறார் சமந்தா.

குரங்குடன் செல்ஃபி: பாலி தீவுக்கு சென்ற நடிகை சமந்தா அங்கே குரங்கு ஒன்றை மடியில் வைத்துக் கொண்டு எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் ஷேர் செய்து சமீபத்தில் லைக்குகளை அள்ளி இருந்தார்.
இந்நிலையில், பாலி தீவில் தனது தோழியுடன் இணைந்து நடனமாடிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டு ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார் குஷி பட நடிகை.
அரை டவுசரில் அப்படியொரு ஆட்டம்: பாலி தீவில் ஓய்வுக்காக சென்றுள்ள சமந்தா செம புத்துணர்ச்சி அடைந்திருக்கிறார் என்று அவர் வெளியிடும் ஒவ்வொரு போஸ்ட்டை பார்த்தாலே தெரிகிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் லைட்ஸ், கேமரா, ஆக்ஷன் தொல்லையில் இருந்து விடுபட்ட சமந்தா பாலி தீவில் தனது தோழியுடன் அரை டவுசர் ஜீன்ஸ் உடையை அணிந்து கொண்டு அசத்தலாக ஆட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங் கமெண்ட்: நடிகை சமந்தாவின் இந்த ஆட்டத்தை பார்த்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் க்யூட் என கமெண்ட் போட்டுள்ளார். நடிகை சமந்தா இது முழுக்க 100 சதவீதம் கேர்ள்ஸ் ட்ரிப் என்பதையும் கேப்ஷனாக பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா நடிப்பில் விரைவில் விஜய் தேவரகொண்டாவின் குஷி படம் வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டா தம்பி நடித்த பேபி படமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள குஷி படமும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications