நாக சைதன்யா தம்பிக்கு ‘ஹக்’ கொடுத்த சமந்தா.. இப்போ மட்டும் ஏன் அந்த குடும்பத்தோடு ஒட்டுறாரு?
ஹைதராபாத்: எக்ஸ் கணவர் குடும்ப பெயரை சமூக வலைதளத்தில் இருந்து தூக்கி எறிந்த நடிகை சமந்தா நாக சைதன்யாவின் தம்பி அகில் அகினேனிக்கு வாழ்த்து சொல்லி பதிவிட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட் காட்டுத் தீ போல ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில், அவரது குடும்பத்தினருடன் நடிகை சமந்தா எந்தவொரு பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நாக சைதன்யாவின் தம்பிக்கு நடிகை சமந்தா பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

முதல் மனைவியின் மகன்
நடிகர் நாகார்ஜுனாவுக்கு அவரது முதல் மனைவியான லக்ஷ்மி டகுபதிக்கும் 1986ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யா மகனாக பிறந்தார். மகன் பிறந்த சில ஆண்டுகளே ஆன நிலையில், 1990ம் ஆண்டு மனைவியை பிரிந்தார் நாகார்ஜுனா. பின்னர், 1992ம் ஆண்டு நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார்.

அமலாவின் மகன்
1994ம் ஆண்டு நடிகர் நாகார்ஜுனாவுக்கும் அவரது இரண்டாவது மனைவி அமலாவுக்கு பிறந்த மகன் தான் அகில் அக்கினேனி. ஏப்ரல் 8ம் தேதி தனது 28வது பிறந்தநாளை கொண்டாடினார் நடிகர் அகில் அக்கினேனி. அவருக்கு செம க்யூட்டான பிறந்தநாள் வாழ்த்துக்களை நடிகை சமந்தா தெரிவித்து இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஹக் கொடுத்த சமந்தா
நாக சைதன்யாவை பிரிந்ததற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் குடும்பத்துடன் எந்த ஒட்டும் உறவும் இன்றி இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்னாள் கணவரின் தம்பியின் பிறந்தநாளுக்கு நடிகை சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அகில் அக்கினேனி.. சிறந்த ஆண்டாக இந்த ஆண்டு அமைய வாழ்த்துக்கள் என ஹக் எமோஜியை போட்டுள்ளார் நடிகை சமந்தா. மேலும், நான் நம்புகிறேன், உனக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் என காட் பிளஸ் என பதிவிட்டுள்ளார்.

இப்போ மட்டும் ஏன்
கணவர் நாக சைதன்யாவை பிரிந்த நிலையில், அவருடன் நட்பாக கூட பழக முடியாத நிலையில், அவரது குடும்பத்தையே தவிர்த்து வந்த நடிகை சமந்தா, திடீரென நாக சைதன்யாவின் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து ஏன் சொல்கிறார் என நாக சைதன்யா ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

கணவரை வெறுப்பேற்றவா
நடிகர் நாக சைதன்யாவை வெறுப்பேற்றும் விதமாகவே நடிகை சமந்தா இப்படியொரு வாழ்த்து போஸ்ட்டை போட்டுள்ளாரா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி ட்ரோல் செய்து வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பின்னர் திருமண நாள் மற்றும் கணவரின் பிறந்தநாளுக்கெல்லாம் நடிகை சமந்தா ஏன் வாழ்த்து சொல்லவில்லை என கமெண்ட் போட்டு வருகின்றனர். சமந்தா யாருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட விஷயம் இதில், மற்றவர்கள் தலையிட வேண்டாம் என அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











