twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    99 வயசு பாட்டி... 90 வயசு தாத்தா... பட்டியல் போட்டு சிறப்பான வேலை செஞ்ச சமந்தா

    |

    ஐதராபாத் : கொரோனா பாதிப்பால் இந்தியாவில் அனைவரும் மிகவும் மோசமான மனநிலையில் உள்ளனர்.

    தங்களது பக்கத்து வீடுகளில் கொரோனா தாக்கத்தை பார்க்கும்போது தன்னுடைய வீட்டிற்குள் கொரோனா பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சம் அனைவரது நெஞ்சங்களிலும் பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.

    பிக் பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா.. 6 பேர் பாதிப்பு.. அதிரடியாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு!பிக் பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா.. 6 பேர் பாதிப்பு.. அதிரடியாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு!

    இந்த நெருக்கடியான நேரத்தில் அனைவரின் மனதிலும் பாசிட்டிவிட்டியை பகிரும் வகையில் நடிகை சமந்தா சிறப்பான பணியில் ஈடுபட்டுள்ளார்.

    அதிக உயிரிழப்புகள்

    அதிக உயிரிழப்புகள்

    இந்தியாவில் கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி உள்ளிட்டவற்றிக்காக மக்கள் அலைமோதி வருகின்றனர். தினந்தோறும் 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நேரத்தில் அனைவரும் மற்றவர்களுக்கு கைகொடுத்து வருகின்றனர்.

    பிரபலங்கள் நிதியுதவி

    பிரபலங்கள் நிதியுதவி

    இந்த நெருக்கடி நேரத்தை கடப்பதில் அனைவருக்கும் சிரமம் காணப்படுகிறது. ஆயினும் கடந்தாக வேண்டிய சூழல் உள்ளது. இந்த நேரத்தில் சினிமா உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அதிகமான நிதியுதவி அளித்து வருகின்றனர். இதன்மூலம் மத்திய, மாநில அரசுகள் இந்த சூழலை ஓரளவிற்கு எதிர்கொண்டு வருகின்றனர்.

    வீடுகளில் முடக்கம்

    வீடுகளில் முடக்கம்

    மக்கள் மனதில் அதிகமான அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நெகட்டிவிட்டியை அவர்கள் எளிதில் எதிர்கொண்டு வெளிவர முடியவில்லை. அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் பல துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை வாய்ப்புகளை இழந்து தொழிலாளர்களும் திணறி வருகின்றனர்.

    குணமடைந்த 3 வயது குழந்தை

    குணமடைந்த 3 வயது குழந்தை

    இந்த நெகட்டிவான சூழலில் நடிகை சமந்தா அக்கிநேனி தன்னால் இயன்ற அளவில் பாசிட்டிவிட்டியை பரப்பியுள்ளார். டெஹ்ராடூனில் 3 வயது குழந்தை வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட நிலையிலும் 12 நாட்களில் கொரோனாவை எதிர்த்து குணமடைந்ததை அவர் குறிப்பிட்டுள்ளார்.

    90 வயது தாத்தா குணம்

    90 வயது தாத்தா குணம்

    இதேபோல குஜராத்தில் 99 வயது சாமுபென் சஹான் நான்கே நாட்களில் குணமடைந்ததையும் லக்னோவின் 90 வயது பகவதி பிரசாத் ஆக்சிஜன் லெவல் 78க்கு குறைந்த நிலையிலும் சிறப்பான வகையில் கொரோனாவை எதிர்த்து குணமடைந்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

    Read more about: samantha சமந்தா
    English summary
    Samantha spreads positivity in this corona situation
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X