ட்விட்டரில் சமந்தா, சித்தார்த்தை வருத்தெடுக்கும் மகேஷ் பாபு ரசிகர்கள்

By Siva

சென்னை: சமந்தா மகேஷ் பாபுவின் நேஒக்கடினே படத்தின் போஸ்டர் பற்றி ட்விட்டரில் விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பொங்கல்/சங்கராந்திக்கு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் நேஒக்கடினே படம் ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கடற்கரையில் மகேஷ்பாபு நடப்பது போன்று பின்னால் ஹீரோயின் நாலு கால் பாய்ச்சலில் பின்தொடர்வது போன்றும் உள்ளது.

போஸ்டரை பார்த்த சமந்தா ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பிற்போக்குத்தனம்

பிற்போக்குத்தனம்

சமந்தா ட்விட்டரில் படத்தின் பெயரை போடாமல் இன்னும் ரிலீஸாகாத தெலுங்கு பட போஸ்டரை பார்த்தேன். மிகவும் பிற்போக்குத்தனமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதற்கு நடிகர் சித்தார்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடுப்பான ரசிகர்கள்

கடுப்பான ரசிகர்கள்

சமந்தாவின் ட்வீட்டை பார்த்த மகேஷ் பாபுவின் ரசிகர்கள் அவர் எப்படி அப்படி சொல்லலாம் என்று கொந்தளித்துவிட்டனர். சமந்தா ட்விட்டரில் விமர்சித்ததால் பதிலுக்கு இவர்களும் ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்துள்ளனர்.

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்

மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சமந்தா மற்றும் சித்தார்த்துக்கு எதிராக #GetLostSamanthaAndSiddharth என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக விட்டுக் கொண்டிருக்கின்றனர். பதிலுக்கு சமந்தா ரசிகர்கள் #WeLoveSamantha என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்குகின்றனர்.

சித்தார்த்

சித்தார்த்

மகேஷ் பாபுவின் ரசிகர்கள் கொந்தளிப்பதை பார்த்த சித்தார்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, தாங்கள் யார், தங்களின் நிலைப்பாடு என்ன என்று தெரிந்தவர்கள் கெட்லாஸ்ட் ஆக மாட்டார்கள். மூளைச்சலவை செய்யப்பட்ட கோபக்கார கூட்டம் கெட்லாஸ்ட் ஆகும். பை, பை என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X