கைவிட்டது ஜானு... கைகொடுக்குமா இந்த த்ரில்லர்? ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் சமந்தா!

By

சென்னை: நடிகை சமந்தா நடிக்கும் அடுத்தப் படத்தை, சோனி பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது.

Recommended Video

Samantha Gym Workout Goes Viral | Keerthy Suresh Miss Indian all Set to Release

நயன்தாரா, ஆரி, லட்சுமி பிரியா உட்பட பலர் நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான படம், மாயா. அஸ்வின் சரவணன் இயக்கி இருந்த இந்தப் படம், வரவேற்பை பெற்றது.

இந்தப் படம் தெலுங்கு, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. இதையடுத்து அஸ்வின் சரவணன் இயக்கிய படம், கேம் ஓவர். டாப்ஸி, வினோதினி, சஞ்சனா, ரம்யா சுப்ரமணியம் உட்பட பலர் நடித்திருந்தனர்.

சைக்காலஜி த்ரில்லர்

சைக்காலஜி த்ரில்லர்

ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்திருந்த இந்த சைக்காலஜி த்ரில்லர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனது. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படங்களுக்குப் பிறகு, அடுத்தும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தை இயக்குகிறார் அஸ்வின் சரவணன். இதற்காக அவர் நடிகை சமந்தாவிடம் கதை சொல்லி இருந்தார்.

சமந்தா

சமந்தா

சமந்தா நடித்தால் தமிழ், தெலுங்கு என இரு மொழி படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தனர். கதையை கேட்டுவிட்டு நடிப்பதாகச் சொல்லியிருக்கும் சமந்தா, அறிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் இதனால் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

எக்சர்சைஸ்

எக்சர்சைஸ்

அதை மறுக்கும் விதமாக அவர், அதிக எடைகளை தூக்கி எக்சர்சைஸ் செய்வது போன்ற வீடியோவை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் அஸ்வின் சரவணன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை சோனி பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகத் தெரிகிறது.

தெலுங்கு ரீமேக்

தெலுங்கு ரீமேக்

நடிகை சமந்தா, தமிழில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியாக ஓடவில்லை. பெரும் நஷ்டத்தை சந்தித்தாகக் கூறப்பட்டது. இதையடுத்து, அஸ்வின் சரவணன் இயக்கும் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். 'இந்தப் படத்தை சமந்தா அதிகமாக நம்புகிறார். 96 படத்தின் தோல்வியை இது சரிகட்டும்' என்று கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X