11 வருஷம்.. 11 மில்லியன் இதயங்கள்.. சமந்தா வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ.. வேற லெவலில் வைரல்!

சென்னை: 11 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில், 11 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகை சமந்தா.

சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே 11 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை பெற்று இருந்த நிலையில், நடிகை சமந்தாவும் தற்போது 11 மில்லியன் இதயங்களுக்கு சொந்தக்காரி ஆகி உள்ளார்.

இது தொடர்பான ஒரு வீடியோ மற்றும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் சமந்தா.

11 வருஷம்

2010ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வந்த நடிகை சமந்தா, 2020ம் ஆண்டு வரை 11 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, பானா காத்தாடி என தமிழிலும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனான ஹே மயா சேசாவே படத்தில் ஜெஸ்ஸியாக நடித்து அறிமுகமான சமந்தா, தென்னிந்திய நடிகையாக 11 ஆண்டுகளாக ரசிகர்களின் ஃபேவரைட் நாயகியாக வலம் வருகிறார்.

11 மில்லியன்

11 மில்லியன்

சிம்பு, நாகசைதன்யா, அதர்வா, விஜய், விக்ரம், தனுஷ், மகேஷ் பாபு, ராம் சரண், விஜய்சேதுபதி என தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள நடிகை சமந்தா சமூக வலைதளத்திலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது இந்த செல்ஃபி புள்ளையின் இன்ஸ்டாகிராமத்தில் 11 மில்லியன் ரசிகர்கள் இணைந்துள்ளனர்.

ஓவர் டேக்

ஓவர் டேக்

சமந்தா ரசிகர்களுக்கும் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கும் சமீபத்தில் பயங்கர ரசிக சண்டை எழுந்தது. சமந்தா டாப்பா? அல்லது பூஜா ஹெக்டே கெத்தா என்ற போட்டி மூண்டது. பிரபாஸ் படமான ராதே ஷ்யாம் படத்தின் அறிவிப்பால், பூஜா ஹெக்டே 11 மில்லியனை சமீபத்தில் கடந்த நிலையில், தற்போது எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், சமந்தாவும் அந்த இலக்கை எட்டியுள்ளார்.

Recommended Video

Samantha Nargajuna Green India Challenge • Blissful Video
யோகா

யோகா

தொடர்ந்து உடற்பயிற்சி, யோகா, செல்ல நாய்க்குட்டியுடன் கொஞ்சுவது, மாமனாருடன் தோட்டக் கலை செய்வது, அழகு குறிப்பு என பல வீடியோக்களையும், போட்டோக்களையும் பதிவிட்டு, மீண்டும் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த நடிகை சமந்தா, மிக விரைவாக 11 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்ந்துள்ளார். இந்த எண்ணிக்கை மேலும், உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X