அடேங்கப்பா.. நடிகை சமந்தாவின் இந்த டிரெஸ்சுக்கு இவ்வளவு விலையா..? அப்படி என்ன விசேஷம் இதுல?
சென்னை: நடிகை சமந்தா புதிதாக அணிந்து வெளியிட்டுள்ள உடையின் விலையை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்.
தமிழில், பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்கமகன், தெறி, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நாக சைதன்யா
இப்போது, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் நடிக்க இருக்கிறார். அஸ்வின் சரவணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். தெலுங்கு ஹீரோ நாக சைதன்யாவை காதலித்து மணந்த சமந்தா ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

விளம்பர ஷூட்டிங்
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக வீட்டில் இருந்த சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன், விளம்பர பட ஷூட்டிங்கில் பங்கேற்றார். பின்னர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியையும் ஒரு வாரத்துக்கு தொகுத்து வழங்கினார். இது வரவேற்பை பெற்றது

ஆஹா டாக் ஷோ
இந்நிலையில், ஆஹா என்ற ஓடிடி தளத்துக்காக டாக் ஷோ ஒன்றை நடத்த இருக்கிறார். இதில் அவர் பிரபலங்களை பேட்டி எடுக்க இருக்கிறார். இந்நிலையில் அவர் அணிந்துள்ள கலர்புல் உடை சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் அதன் விலை ரூ.27 ஆயிரம் ரூபாயாம்.
Recommended Video

வித்தியாச டிசைன்
மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஷ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்ட துணியால் உருவான ஆடையாம் அது. வித்தியாசமான கலர்களில், வேற லெவல் டிசைனில் தோன்றும் சமந்தாவின் இந்த டிரெஸ் வைரலாகி வருகிறது. இவர் ஏற்கனவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அணிந்த ஆடையின் விலை, ரூ.44 ஆயிரம் என்று கூறப்பட்டது.


Click it and Unblock the Notifications











