Samantha: சிம்பத்தி ஸ்டார் சமந்தா..அழுது, கதறினால் படம் ஓடிவிடுமா? சாகுந்தலம் படத்தை விளாசிய பிரபலம்!
சென்னை : சமந்தா நடித்த சாகுந்தலம் படத்தை வலைப்பேச்சு அந்தணன் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்துள்ளார்.
இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் ஏப்ரல் 14ந் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சாகுந்தலம் . இதில் மலையாள நடிகர் தேவ் மோகன்,அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மணிசர்மா இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகி உள்ளது.
மோசமான திரைக்கதை : இந்நிலையில், சினிமா விமர்சகரான வலைப்பேச்சு அந்தணன் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், சமந்தாவின் சாகுந்தலம் படம் பார்த்தேன், இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்து இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது. ஏற்கனவே நாம் படித்த கதை தான் என்பதால், அந்த கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு சமந்தா பொருத்தமாக இருந்தார். ஆனால், கதையில் வரும் சிஜி வொர்க், திரைக்கதை, கதையின் வேகம் எல்லாம் ரொம்ப மோசமாக இருந்தது. தாங்கமுடியாத பொறுமையுடன் தான் படத்தைப் பார்த்தேன்.

சிம்பத்தி ஸ்டார் : சமந்தாவுக்கு உடலில் ஒரு பிரச்சனை இருந்தது அதை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு மீண்டுவந்துள்ளார். வேறு ஒரு நடிகைக்கு இது போன்று பிரச்சனை ஏற்பட்டு இருந்தால், அவர் மீண்டு வந்து இருப்பார் என்பது சந்தேகம் தான். தெலுங்கு சினிமாவில் கொடி கட்டிப்பறக்கும் நாகார்ஜூன் குடும்பத்தையே எதிர்த்து தைரியமாக வெளியில் வந்து இன்று வரை, டாப் நடிகையாக இருக்கும் சமந்தா, பொது நிகழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு அழுவதால், அவரை சிம்பத்தி ஸ்டார் என்று ரசிகர்கள் ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர்.

அழுது, கதறினால் படம் ஓடிவிடுமா? : மேலும்,சமந்தா ப்ரோமோஷனில் அழுது தனது படத்தை ஒடவைக்க பார்க்கிறார் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. சமந்தா ஒரு துணிச்சலான பெண், அவருக்கு பல கஷ்டம் இருக்கும் அதற்காக அழுவது சரியானதாக இருக்காது. இவர்களை விட வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் பலர் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். என்னத்தான் கதறி அழுது புரண்டாலும் அது டிக்கெட்டாக மாறாது ,கதை நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் ரசிப்பார்கள்.
கவர்ச்சியாக நடிக்க காரணம் : சமந்தா நாகசைத்தன்யாவை காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பல பிரச்சனைகளை சமந்தா சந்தித்தார். நடிக்கக்கூடாது, கவர்ச்சியாக நடிக்கக்கூடாது என்று அவருக்கு பல முட்டுக்கட்டைகள் இருந்தன. ஆனால், சினிமாவின் மீது இருந்த காதலால் அவற்றை எல்லாம் மீறி தொடர்ந்து சினிமாவில் நடித்தார். ஒரு கட்டத்தில் பிரச்சனை அதிகமானதால் தான் விவாகரத்து பெற்று பிரிந்தார். திருமணத்திற்கு பிறகும் எனது அழகும், இளமையும் குறையவில்லை என்பதை நிரூபிக்கத்தான் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











