வாடகைத் தாயான சமந்தா… ஆக்சன் திரில்லரில் மிரட்டும் யசோதா ட்ரெய்லர்….
ஐதராபாத்: சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள யசோதா படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
யசோதா படத்தின் தமிழ் ட்ரெய்லரை தமிழில் சூர்யாவும், மலையாளத்தில் துல்கர் சல்மானும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவும் வெளியிட்டுள்ளனர்.

சமந்தாவின் யசோதா
சமந்தா நடிப்பில் அடுத்தடுத்து யசோதா, குஷி, சாகுந்தலம் ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இதில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள யாசோதா நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. யசோதா படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அதேபோல் மலையாளத்தில் துல்கர் சல்மானும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவும், கன்னடத்தில் ராக்ஷித் ஷெட்டி, இந்தியில் வருண் தவான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

கதை இது தானா?
ஹரீஷ் நாராயண், கே. ஹரி ஷங்கர் இருவரும் இணைந்து இயக்கியுள்ள யசோதா, பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளாம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது வெளியான ட்ரெய்லரில் படத்தின் கதை குறித்து சில லீட் கிடைத்துள்ளது. அதன்படி கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சமந்தா, பணத்திற்காக வாடகைத் தாயாக சம்மதிக்கிறார். அப்போது அங்கே நடக்கும் பிரச்சினைகளில் இருந்து சமந்தா தப்பித்தாரா இல்லையா என்பதே கதையாக இருக்கும் என தெரிகிறது.

ஆக்ஷனில் மிரட்டல்
சமந்தா கர்ப்பிணியாகவும் அதேநேரம் ஆக்சனில் அதிரடியாக மிரட்டும் கேரக்டரிலும் நடித்துள்ளார். முக்கியமாக ஆக்சன் காட்சிகளில் சமந்தாவின் வேகம் சிலிர்க்க வைக்கிறது. பணத்திற்காக வாடகைத் தயாக செல்லும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றி இந்தப் படம் பேசுகிறதா என ட்ரெய்லரை பார்த்ததும் கேள்வி எழுந்துள்ளது. சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், சம்பத்ராஜ், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

ரசிகர்களிடம் வரவேற்பு
ஏற்கனவே யசோதா படத்தின் டீசர் வெளியாகி செம்ம திரில்லிங்கான எக்ஸ்பீரியன்ஸை கொடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ட்ரெய்லரின் முடிவில் வரும் "யசோதா யாருன்னு தெரியும்ல" என்ற சமந்தா பேசும் வசனமும் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நவம்பர் 11ம் தேதி வெளியாகவுள்ள யசோதா படத்தின் ப்ரோமோஷனில் சமந்தா விரைவில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











