அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸையும் விட்டுவைக்காத யசோதா… கண்கலங்கியதற்கு கைமேல் பலன்... நன்றி சொன்ன சமந்தா

ஐதராபாத்: சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

வாடகைத்தாய் பிரச்சினையை பின்னணியாக வைத்து ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள யசோதா படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சமந்தா முதன்மையான பாத்திரத்தில் நடித்துள்ள யசோதா, அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் யாரும் எதிர்பார்க்காத சாதனையை படைத்துள்ளது.

ரசிகர்களிடம் வரவேற்பு

ரசிகர்களிடம் வரவேற்பு

சமந்தா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள யாசோதா நேற்று உலகம் முழுவதும் வெளியானது. சமந்தா முதன்மையான பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரீஷ் நாராயண், கே. ஹரி ஷங்கர் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான யசோதா படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மழை காரணமாக கொஞ்சம் டல்லடித்தாலும், ஆந்திரா, மும்பை, டெல்லி உட்பட பல இடங்களில் யசோதாவுக்கு தரமான சக்சஸ் கிடைத்துள்ளது. முக்கியமாக அமெரிக்கா, மலேஷியா ஆகிய நாடுகளிலும் சமந்தாவின் யசோதா சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ்

அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ்

யசோதா திரைப்படம் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட நல்ல கலெக்‌ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியா முழுவதும் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். அதேபோல், அமெரிக்காவில் முதல் நாளில் மட்டும் 50 லட்சம் வரை கலெக்‌ஷன் செய்து கெத்து காட்டியுள்ளது. ஆக மொத்தம் உலகம் முழுவதும் 4 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது யசோதா. அமெரிக்காவில் சமந்தா படத்துக்கு தரமான ஓப்பனிங் கிடைத்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். சமந்தா ஹீரோயினாக நடித்து வெளியான இந்தப் படம் முதல் நாளில் 4 கோடி வரை வசூலித்துள்ளது திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ரியல் பான் இந்தியா ஸ்டார்

ரியல் பான் இந்தியா ஸ்டார்

வாடகைத்தாய் கான்செப்ட்டை பின்னணியாக வைத்து மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சினைகளை பேசுகிறது யசோதா. ரொம்பவே சென்சிட்டிவான கேரக்டரில் வரும் சமந்தா நடிப்பிலும் ஆக்சன் காட்சிகளிலும் அதகளம் செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். படம் முழுக்க சமந்தாவின் சோலோ பெர்ஃபாமன்ஸ் தான் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமந்தா தெரிவித்திருந்தார். மேலும், யசோதா ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் தான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன் எனக் கூறி கண் கலங்கினார். இந்நிலையில், நேற்று வெளியான யசோதா எதிர்பார்த்ததை விட சூப்பரான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. .

சமந்தா நன்றி

சமந்தா நன்றி

இந்நிலையில், யசோதா படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு சமந்தா உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவீட் செய்துள்ள சமந்தா "முன்பை விட இந்த முறை யசோதா படத்துக்கு உங்கள் அனைவரின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன், அதற்காக பிரார்த்தனை செய்கிறேன். என் மீதும் யசோதா மீதும் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கும் அன்புக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். உங்கள் குடும்பத்தில் என்னையும் ஒருவராக நினைத்து யசோதா படத்தை ரசிப்பீர்கள் என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து யசோதா படத்தின் வெற்றியை பாராட்டி பலரும் சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவை கடந்து அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸிலும் சமந்தா படத்துக்கு நல்ல ஒப்பனிங் கிடைத்துள்ளது திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூப்பர் ஹிட் யசோதா

சூப்பர் ஹிட் யசோதா

சமந்தாவுடன் வரலக்‌ஷ்மி சரத்குமார், சம்பத்ராஜ், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலேயே கெத்து காட்டிய யசோதா, ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் ப்ரீ ரிலீஸ் மூலமாகவும் 53 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. யசோதா படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் சமந்தாவின் மார்க்கெட் இன்னும் உச்சம் தொட்டுள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X